முதலில் விஜய், இப்போ சுர்யா...எங்கேயோ போன பீஸ்ட் நாயகியின் மார்க்கெட்
சென்னை : சுர்யா ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்களும் செம ஹிட்டாகி வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படமும் வரவேற்பை பெற்றுள்ளது.
சுரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வரும் சுர்யா, அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாலா இயக்கும் சுர்யா 41 இறுதிக்கட்ட ஷுட்டிங் ஒரு பக்கம் நடந்தாலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் தாமதமாகும் என குறப்படுவதால் அடுத்து யாருடைய படத்தில் சுர்யா நடிக்க போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

என்ன...சுர்யா 39 எடுக்க போறாங்களா
இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, சுர்யா39 படத்தை சிறுத்தை சிவா தான் இயக்க இருந்ததாம். பல காலமாக தாமதமாகி வரும் இந்த படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். பெரிய பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளர் மாற்றப்பட்டது தான் இந்த படத்தின் தாமதத்திற்கு காரணமாம்.

சுர்யாவுக்கு ஜோடி இவரா
பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்களை தயாரித்த யுவி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் சிறுத்தை சிவா - சுர்யா இணையும் படத்தை தயாரிக்க உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உறுதியானதாம். இந்த படத்தில் சுர்யாவிற்கு ஜோடியாக புஜா ஹெக்டே நடிக்கிறாராம்.

நயன், சாமிற்கு பிறகு இவர் தானா
விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிறகு புஜா ஹெக்டேவிற்கு தமிழில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை நயன்தாரா, சமந்தாவிற்கு பிறகு புஜாவிற்கு தான் மவுசு அதிகமாம். அதிக ரசிகர்களும் இருக்கிறார்களாம். இதனால் சுர்யாவிற்கு ஜோடியாக புஜாவை நடிக்க வைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறதாம்.

ஓகே சொல்வாரா பீஸ்ட் நாயகி
புஜாவுடன் ஆரம்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாம். ஒருவேளை அவர் ஓகே சொல்லி விட்டால், மிக விரைவிலேயே படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஷுட்டிங் துவங்கப்படும் என குறப்படுகிறது. ஜு லை மாதத்தில் வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கப்பட உள்ளதாம். இதை முடித்த கையோடு சிறுத்தை சிவா படத்தில் சுர்யா நடிக்க உள்ளதாக குறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











