»   »  அண்ணாமலை 'கவர்ச்சி கிழவி'யை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?

அண்ணாமலை 'கவர்ச்சி கிழவி'யை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதானாலும் கவர்ச்சியாக இருக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் நடிகை ஜோதிலட்சுமி.

1963ம் ஆண்டு நடிக்க வந்தவர் ஜோதிலட்சுமி. நடிப்பு மற்றும் கவர்ச்சி நடனத்தால் புகழ் பெற்றவர். அவரது மகள் ஜோதிமீனாவும் தாயின் வழியில் கவர்ச்சி காட்டி நடித்ததுடன், நடனமும் ஆடி வந்தார்.

Age no bar for being hot: Proves Jyothi Lakshmi

ஏன் தாயும், மகளும் கூட சேர்ந்து கவர்ச்சியாக நடனமாடியுள்ளனர். வயதானாலும் கூட கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் ஜோதிலட்சுமி. வயதானால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் வரவேண்டுமா, என்னால் கவர்ச்சியாகவும் இருக்க முடியும் என்று நிரூபித்தவர் ஜோதிலட்சுமி.

முத்து படத்தில் கொக்கு சைவ கொக்கு மற்றும் சீயான் விக்ரமின் சேது படத்தில் கான கருங்குயிலே பாடல்களுக்கு ஜோதிலட்சுமி போட்ட ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆட்டம் போடுகிறாரே என்று இளசுகளையே வியக்க வைத்தவர்.

ராதிகா சரத்குமாரின் அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் காந்திமதி அம்மாளாக நடித்தவர் ஜோதிலட்சுமி. அவர் கதாபாத்திரத்தின் பெயர் என்னவோ காந்திமதி ஆனால் அவரின் மருமகன் கோமதி நாயகமாக நடித்த பொன்வண்ணனோ அவரை கவர்ச்சிக் கிழவி என்றே அழைப்பார். அதில் இருந்து கவர்ச்சி கிழவி பட்டம் மிகவும் பிரபலம் ஆனது.

English summary
Actress Jyothi Lakshmi has proved that she can be hot irrespective of the age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil