»   »  ஐஸ்-அபிஷேக் நிச்சயதார்த்தம்

ஐஸ்-அபிஷேக் நிச்சயதார்த்தம்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்திருமணம் ஒரு வழியாக வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களது திருமணநிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டில் மிகவும் எளிமையாகநடந்தேறியது. மார்ச் அல்லது ஏப்ரலில் கல்யாணமாம்.

33 வயதாகும் ஐஸ்வர்யாவும், 30 வயதாகும் அபிஷேக் பச்சனும் படு தீவிரமாககாதலித்து வருகின்றனர். இருவருக்கும் எப்போது கல்யாணம் என்று இந்தியாமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிலதோஷங்கள் இருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்த பின்னரே திருமணம் செய்யவேண்டும் என ஜோதிடர்கள் கூறியதால் திருமணம் தள்ளிப் போனது.

இந் நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் குறித்த பரபரப்புச் செய்திகள்வெளியாக ஆரம்பித்தன. மதுரையில் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்,காசியில் வைத்து கல்யாணத்தை முடித்து விட்டனர் என அடுத்தடுத்து செய்திகள் வந்துஅலைமோதின.

இந்த நிலையில், இவர்களது கல்யாண நிச்சயதார்த்தம் இப்போது நடந்துள்ள செய்திஅதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மும்பை ஜூஹூ பகுதியில் உள்ளஅமிதாப்பச்சன் வீட்டில் வைத்து 13ம் தேதி இரவு எளிமையான முறையில்நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர், சமாஜ்வாடிக்கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், தொழிலதிபர் அனில் அம்பானி, அவரதுமனைவி டினா உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.

ஐஸ் கையில், அபிஷேக் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். முன்னதாக குருபட ரிலீஸுக்காக அமெ>க்கா சென்றிருந்த ஐஸும், அபியும் மும்பை வந்ததும்அமிதாப் வீட்டுக்கு ஜோடியாக வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில்நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களது திருமணம் அடுத்த மாதம் 19ம் தேதி அல்லது மார்ச் 7ல் நடைபெறும் எனத்தெ>கிறது. அபிஷேக்குக்கு பிப்ரவரி 5ம் தேதி 31 வயது பிறக்கிறது (பொதுவாக 30வயதில் திருமணம் செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அன்றே கூடதிருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளனவாம்.

பிப்ரவரி 19ம் தேதியன்று மும்பையில் உள்ள பிரபல ஹயாத் ஹோட்டலில் முக்கியவிருந்தினர்களுக்காக அறைகளை புக் செய்துள்ளதாக அமிதாப் குடும்பம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்தத்திற்குப் பின்னர் அபிஷேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது. திருமணத்தை எதிர்நோக்கியுள்ளேன். தேதி குறித்து நான் கூறமுடியாது. பெ>யவர்கள் முடிவு செய்ய வேண்டியது அது.

ஐஸ்வர்யா ராய் சிறந்த நடிகை. தொடர்ந்து நடிப்பாரா, இல்லையா என்பதை அவரேமுடிவு செய்வார் என்றார் அபிஷேக்.

ஏற்கனவே அபிஷேக்குக்கும், பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கும் நிச்சயதார்த்தம்நடந்தது. ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை, பாதியில் முறிந்து போனது.அதேபோல சல்மான்கான்,விவேக் ஓபராய் ஆகியோரை தீவிரமாக காதலித்து வந்தஐஸ் அவர்களின் காதலை பாதியிலேயே முறித்துக் கொண்டார்.

நிச்சயதார்த்தத்தின் மூலம் ஐஸ், அபிஷேக் கல்யாண குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil