»   »  ஏப் 9: ஐஸ்-அபிஷேக் டும் டும

ஏப் 9: ஐஸ்-அபிஷேக் டும் டும

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகெங்கும் உள்ள இந்திய சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமணம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா முதலில் சல்மான் கானைக் காதலித்தார். ஐஸ் அமைதியாக காதலிக்க, சல்மான் முரட்டுக்காதலை வெளிக்காட்டவே இந்தக் காதல் முறிந்து போனது.

பின்னர் வந்து சேர்ந்தார் விவேக் ஓபராய். ஐஸும், இவரும் படு தீவிரமாக காதலித்தனர். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட பேசப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ, விவேக்கை விட்டு விட்டார் ஐஸ்.

இரு காதல் தோல்விகளால் ஐஸ் மனம் உடைந்து போய் விடவில்லை. பிக் பீ என இந்தி திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸுக்கும் காதல் மலர்ந்தது.

இந்தக் காதல் முந்தைய காதல்களைப் போல தடுமாற்றம் இல்லாமல், விறுவிறுப்பாக போனது. இப்போது கல்யாணத்தில் வந்து நிற்கிறது.

இரு வீட்டாரின் சம்மதத்திற்குப் பிறகு கடந்த ஜனவரி 14ம் தேதி அமிதாப் பச்சனின் வீட்டில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு வீட்டார் மற்றும் மிக மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் கல்யாணத் தேதியை நிச்சயம் செய்ய முடியாமல் அமிதாப் குடும்பம் குழம்பிக் கிடந்தது. இப்போது ஒரு வழியாக தேதி குறித்து விட்டார்கள்.

ஏப்ரல் 19ம் தேதி அமிதாப் பச்சனின் வீட்டில் வைத்து மிக மிக எளிமையாக கல்யாணம் நடைபெறவுள்ளது.

இதை குடும்ப விழாவாக நடத்த அமிதாப் பச்சன் குடும்பம் முடிவு செய்துள்ளதாம். இதனால் திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கின்றனர்.

அதேபோல அமிதாப் பச்சனின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம். அநேகமாக அதுவும் இருக்காது என்று கூறுகிறார்கள்.

எப்படியோ, இருவரும் இல்லறத்தில் இணைந்து, புது வாழ்க்கையைத் தொடங்கினால் போதும

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil