»   »  உருகும் ஐஸ் மார்க்கெட்!

உருகும் ஐஸ் மார்க்கெட்!

Subscribe to Oneindia Tamil

கல்யாணத்திற்கு முன்பிருந்த ஐஸ்வர்யா ராயின் மார்க்கெட் இப்போது இல்லையாம். அவர் புக் ஆகியிருந்த இரு படங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளாராம்.

இன்னிய தேதி வரைக்கும் பாலிவுட் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகின் நம்பர் ஒன் நாயகி ஐஸ்வர்யா ராய்தான். ஆனால் கல்யாணமான பின்னர் ஐஸ்வர்யாவின் மார்க்கெட் முன்பு போல ஸ்டெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்தான். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் அவர் மீதான மோகம் பாலிவுட்காரர்களிடையே குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக அவர் கல்யாணத்திற்கு முன்பு நடிக்க புக் ஆகியிருந்த இரு படங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளாராம் (அல்லது தவிர்க்கப்பட்டுள்ளார்)

தென்னகத்தின் பால்கி இயக்கிய சீனி கம் படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவரது இயக்கத்தில் அமிதாப் பச்சன் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அபிஷேக் பச்சனும் உள்ளார். படத்திற்கு பா என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய்தான் புக் ஆகியிருந்தார். ஆனால் இப்போது ஐஸ்வர்யா இல்லையாம். அவருக்குப் பதில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா ஏன் இல்லை எனபற்கு பால்கி தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை.

இதேபோல, சந்திரபிரகாஷ் திவாரியின் புதிய படம் ஒன்றிலும் ஐஸ்வர்யா நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்தும் ஐஸ்வர்யா நீக்கப்பட்டு விட்டாராம். அவருக்குப் பதில் செலீனா ஜெட்லியை புக் பண்ணியுள்ளனர்.

ஐஸ்வர்யாவின் மார்க்கெட் உருகத் தொடங்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அல்லது ஐஸ்வர்யாவை நடிப்புக் களத்திலிருந்து மெல்ல மெல்ல அமிதாப் குடும்பம் விலக்க ஆரம்பித்துள்ளது என்று முனுமனுப்பு எழுந்துள்ளது.

மொத்தத்தில் ஐஸ் ரிடையர்ட் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil