Don't Miss!
- News
2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்.. 5 பெரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வருமான வரி சலுகை இருக்குமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யாஷிகாவை அப்படியே காப்பி அடிக்கும் ஐஸ்வர்யா தத்தா...வச்சு செய்யும் நெட்டிசன்கள்
சென்னை : யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறியவர்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சி இவர்கள் இருவருக்குமே, அவர்களது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யாஷிகா வெளியேற முக்கிய காரணங்களில் ஒன்று, அவர் தன்னுடைய தோழியான ஐஸ்வர்யா தத்தா, தவறு செய்தாலும் அதற்கு ஓவராக சப்போர்ட் செய்தது தான்.இதனால் ஒரு கட்டத்தில், ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்களுக்கு மேல் இருந்து 2-வது வெற்றியாளராக மாறினார். முதல் இடத்தை, நடிகை ரித்விகா கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் தொடர்ந்து தோழிகள் இருவருமே பார்ட்டிக்கு செல்வது, விதவிதமான கவர்ச்சி உடைகளில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டி போட்டு, எல்லை மீறிய கவர்ச்சி போட்டோஷுட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இவர்களின் அத்துமீறிய கவர்ச்சி போட்டோக்கள் சில நேரம் விமர்சனங்களை சந்தித்தாலும், மற்றொரு புறம் ரசிகர்களின் லைக்குகளை பெற்று செம வைரலாவது உண்டு.
அதிதி
ஷங்கர்
என்ட்ரி..
ஆத்மிகா
ஆதங்கம்..
கோலிவுட்டிலும்
வெடித்த
நெபோடிசம்
சர்ச்சை!
சமீபத்தில் பச்சை நிற பிகினி உடையில்,நீச்சல் குளத்தில் இருப்பது போது யாஷிகா போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கவர் போட்டோவிற்காக யாஷிகா இந்த போட்டோவை வெளியிட்டிருந்தார். தற்போது யாஷிகா அணிந்த அதே பச்சை நிற பிகினியில், நீச்சல் குளத்தில் நின்றபடி ஐஸ்வர்யா தத்தாவும் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், யாஷிகாவை அப்படியே காப்பி அடித்து, ஐஸ்வர்யா தத்தா போஸ் கொடுத்துள்ளதை விமர்சித்து வருகிறார்கள். இருவரின் போட்டோக்களையும் ஒன்றாக இணைந்து தாறுமாறாக தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.