»   »  கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் அழகு அவதாரங்கள்

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் அழகு அவதாரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகைகள் சோனம் கபூர், கத்ரீனா கைஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ள போதிலும் ஐஸ்வர்யா ராய் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருபவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்த ஆண்டு விழாவில் லாரியல் பிராண்ட் அம்பாசிடர்களான ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகைகள் சோனம் கபூர் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் அனைவரின் கவனமும் ஐஸ்வர்யா ராயின் பக்கம் தான் திரும்பியுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் வகை வகையான ஆடை அணிந்து நடந்து வருகிறார். அவர் வெள்ளை நிற ரால்ப் அன்ட் ரூஸோ கவுனில் அழகாக இருந்தார்.

அழகு

அழகு

கேன்ஸ் விழாவில் ஜூனியர்களான சோனம் கபூர், கத்ரீனா கைஃப் ஆகியோரும் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்தாலும் ஐஸ்வர்யா ராய் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அழகோ அழகு

அழகோ அழகு

ஆஸ்கர் டீ லா ரென்டா வடிவமைத்த வெரி பெர்ரி கவுனில் ஐஸ்வர்யா பார்க்க மிகவும் அழகாக இருந்தார். குழந்தை பெற்ற பிறகு ஐஸ் குண்டடித்துவிட்டார் என்று விமர்சனத்திற்குள்ளானார். தற்போது அவர் மீண்டும் பழையபடி சிக்கென ஆகியுள்ளார்.

எலி சாப் கவுன்

எலி சாப் கவுன்

எலி சாப் டிசைனர் கவுனில் ஐஸ்வர்யா அம்சமாக உள்ளார். வயது என்பது வெறும் எண் தான், அதற்கும் அழகிற்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்துள்ளார் அமிதாப் பச்சன் வீட்டு மருமகள்.

தேவதை

தேவதை

ஐஸ்வர்யா ராய் வெள்ளை நிற கவுனில் தேவதை போன்று வலம் வந்தார். தன் உடல்வாகை பற்றி கிண்டல் செய்தவர்களே அவரை வியந்து பார்க்கும் வகையில் உள்ளார் ஐஸ்.

லாவெண்டர்

லாவெண்டர்

ஐஸ்வர்யா ராய் லாவெண்டர் நிற கவுனில் பார்ப்பவர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவுக்கு அழகாக இருந்தார். தனது கவுனுக்கு ஏற்றது போன்று நகை அணிந்து அளவாக மேக்கப் போட்டிருந்தார்.

English summary
Senior Aishwarya Rai has got more attention in Cannes film festival than juniors Sonam Kapoor and Katrina Kaif.
Please Wait while comments are loading...