கிளாமர் போட்டோ போட்டது வீண் போகல… ஐஸ்வர்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட்!
சென்னை : சோஷியல் மீடியாவில் படுகவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் வரிசையாக மூன்று படங்களில் ஒப்பந்தமாகி படுபிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
2012ம் ஆண்டு வெளியான 'லவ் பெயிலியர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்தவர் ஐஸ்வர்யா மேனன்.
அழகும் திறமையும் இருந்த போது சரியான படவாய்ப்பு இல்லாததால், பட வாய்ப்பை பெற சோஷியல் மீடியாவில் எப்போதும் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யாவுக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.

ஐஸ்வர்யா மேனன்
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது தமிழ் படம் 2. இந்த திரைப்படத்தை அடுத்து, சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.

கவர்ச்சி போட்டோ
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவது வழக்கம்.

பிஸியான நடிகை
சாஹோ மற்றும் ராதே ஷியாம் போன்ற திரைப்படங்களை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆர்எக்ஸ் 100 மற்றும் வலிமை படத்தின் மூலம் அதிக வரவேற்பை பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, பிரசாந்த் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தனிகெல்லா பரணி, ரவிசங்கர் மற்றும் ஷரத் லோஹிதாஸ்வா போன்றோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது

விரைவில் அறிவிப்பு
கார்த்திகேயாவுக்கு இது 8-வது படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இந்தப் படத்தை கேரி இயக்குகிறார். இதைத் தவிர மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இது தவிர சில தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











