»   »  8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐஸ்வர்யா ராய் வாழ்வில் நடந்த மாற்றம்!

8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐஸ்வர்யா ராய் வாழ்வில் நடந்த மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சனின் மருமகள் ஆகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகின்றன.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் மீது காதலில் விழுந்தார். 2000ம் ஆண்டு வெளியான தாய் அக்ஷர் பிரேம் கி என்ற படத்தில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் ஜோடியாக நடித்தனர். அந்த படத்தில் நடிக்கையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து அவர்கள் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர்.

திருமணம்

திருமணம்

2000ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்த ஐஸும், அபிஷேக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களாவான பிரதீக்ஷாவில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிப்பு

நடிப்பு

திருமணம் முடிந்த பிறகும் ஐஸ்வர்யா ராய்க்கு திரை உலகில் மவுசு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தான் அவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து எந்திரன் படத்தில் நடித்தார்.

குழந்தை

குழந்தை

ஐஸ்வர்யா கர்ப்பமான பிறகு நடிப்பதை நிறுத்தினார். அவர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி ஆராத்யாவை பெற்றெடுத்தார். ஆராத்யா பிறந்த பிறகும் அவர் நடிக்கவில்லை. மகள் பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஐஸ்வர்யா மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

திருமண நாள்

திருமண நாள்

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கு திருமணமாகி இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலிவுட்டின் அழகிய தம்பதி என்று ஐஸ்-அபிஷேக் பெயர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

ஐஸ்வர்யா ராய் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். விளம்பர உலகின் முடிசூடா ராணியாக உள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர் எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க விளம்பரதாரர்கள் தயாராக உள்ளனர்.

English summary
Aishwarya Rai and Abishek Bachchan have celebrated their 8th wedding anniversary today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil