»   »  டென்ஷனில் நகத்தை நறுக் நறுக்குன்னு கடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்

டென்ஷனில் நகத்தை நறுக் நறுக்குன்னு கடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது ஜஸ்பா பட ரிலீஸை நினைத்து ஒரே டென்ஷனாக உள்ளாராம்.

பாலிவுட், கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் கர்ப்பமான உடன் படங்களில் நடிக்கவில்லை. 2011ம் ஆண்டு அவர் மகள் ஆராத்யாவை பெற்றெடுத்தார். மகள் பிறந்த பிறகு அவருடன் இருக்க நினைத்து சினிமா படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் மீண்டும் படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

ஜஸ்பா

ஜஸ்பா

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடைசியாக குஜாரிஷ் படம் 2010ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு ஐஸ் நடிப்பில் தற்போது ஜஸ்பா படம் அக்டோபர் மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

5 ஆண்டுகள் கழித்து தனது படம் வெளியாக உள்ள நிலையில் அதை நினைத்து ஐஸ் ஒரே டென்ஷனில் உள்ளாராம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வெளியாகும் தனது படத்திற்கு என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை நினைத்து தான் ஐஸுக்கு டென்ஷனாம்.

டென்ஷன்

டென்ஷன்

என்னைப் போன்றே படத்தில் நடித்தவர்கள் அனைவரும் டென்ஷனாக உள்ளனர் என்று நினைக்கிறேன். அக்டோபர் வெகு தொலைவில் இல்லை. படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் ஐஸ்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

படத்தில் ஐஸ்வர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். நடிப்புக்கு பெயர் போன இர்பான் கான் ஜஸ்பா படத்தில் நடித்துள்ளார். டிரெய்லரை பார்த்த பிறகு படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that actress Aishwarya Rai Bachchan is tensed ahead of her movie Jazbaa's release.
Please Wait while comments are loading...