»   »  'ரோபோட்'டில் ஐஸ்வர்யா ராய்!

'ரோபோட்'டில் ஐஸ்வர்யா ராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Aishwaryarai with mother

ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர்.

ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார்.

ஆனால் ஏற்கனவே படையப்பா, சந்திரமுகி, சிவாஜி என மூன்று ரஜினி படங்களிலும் நடிக்க மறுத்தவர் ஐஸ்வர்யா. எனவே ரோபோ படத்தில் நடிக்க அவர் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

இருந்தாலும் ஷங்கர் தனது முயற்சிகளைத் தொடங்கினார். தற்போது அவரது முயற்சி பலித்து ஐஸ்வர்யா ராய், ரஜினி படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார்.

இதுதொடர்பான ஒப்பந்தம் மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் ஜனக் இல்லத்தில் வைத்து கையெழுத்தாகியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் அமிதாப் பச்சனின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் சம்மதம் கொடுத்த பின்னர் அதில் ஐஸ்வர்யா கையெழுத்திட்டாராம்.

இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

ரஜினி பட நாயகி ஒருவருக்கு கோடியைத் தாண்டி சம்பளம் தரப்படுவது இதுவே முதல் முறை. மேலும் தென்னிந்திய மொழிப் படத்தின் நாயகி ஒருவருக்கு தரப்படும் முதல் அதிக சம்பளமும் இதுவே.

ரோபோவில் திரிஷா நடிப்பார், தீபிகா படுகோன் நடிப்பார், ஆசின் நடிக்கப் போகிறார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.

மும்பையை சேர்ந்த ஈரோஸ் மல்டி மீடியா நிறுவனமும், ஐங்கரன் இன்டர் நேஷனல் நிறுவனமும் இணைந்து ரோபோவை தயாரிக்கவுள்ளன.

இந்தப் படத்திற்கு முன்பாக பி.வாசு இயக்கத்தில் ரஜினி குசேலன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதை முடித்துக் கொடுத்து விட்டு ரோபோ படத்திற்கு வருகிறார்.

இதற்கிடையே, ரோபோ என்ற பெயர் தமிழ் அல்ல என்பதால், அதற்கு மாற்றான நல்ல தமிழ்ப் பெயரை தேடி வருகிறாராம் படத்தின் கதாசிரியரான எழுத்தாளர் சுஜாதா.

படத்தின் கதைப்படி ஐஸ்வர்யாவின் கேரக்டர் பெயர் நிலா. ஒரு வாரமாக முயற்சி செய்து ஐஸ்வர்யாவின் ஒப்புதலைப் பெற்றுள்ளாராம் ஷங்கர்.

தமிழில் ஐஸ்வர்யா நடிக்கவிருக்கும் 4வது படம் இது. மணிரத்தினத்தின் இருவர் படம் மூலம் தமிழுக்கும், நடிப்புக்கும் வந்த ஐஸ்வர்யா அதன் பின்னர் ஷங்கரின் ஜீன்ஸ் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். அதன் பின்னர் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் நடித்தார். அதுதான் அவர் கடைசியாக தமிழில் நடித்த படமாகும். தற்போது ரோபோட் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil