»   »  நடிக்க வந்து 20 வருஷமானாலும் அழகும், இளமையும், ஸ்டைலும் குறையாத ஐஸ்வர்யா ராய்

நடிக்க வந்து 20 வருஷமானாலும் அழகும், இளமையும், ஸ்டைலும் குறையாத ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தனது 24வது வயதில் நடிகையானார். இயக்குனர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார் ஐஸ்வர்யா ராய். அதையடுத்து அவ்ர் ப்யார் ஹோ கயா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இருவர் மற்றும் அவ்ர் ப்யார் ஹோ கயா ஆகிய படங்கள் கடந்த 1997ம் ஆண்டு வெளியாகின.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் கவனம் செலுத்தத் துவங்கினார் ஐஸ்வர்யா ராய். விளைவு பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். ஹாலிவுட் பக்கமும் சென்று வெற்றி கண்டார்.

பிராண்ட் அம்பாசிடர்

பிராண்ட் அம்பாசிடர்

சர்வதேச பிராண்டுகள் ஐஸ்வர்யா ராயை தங்களின் பிராண்டு அம்பாசிடராக ஒப்பந்தம் செய்தன. உலக அளவில் ஐஸ்வர்யா ராய் பிரபலம் என்பதால் அவரை அணுகின.

மவுசு

மவுசு

ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்து 20 ஆண்டுகளாகிவிட்டாலும் அவர் இன்னும் அதே இளமை, அழகுடன் உள்ளார். அவருக்கான மவுசு இன்னும் குறையவில்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

உலக அழகி பட்டத்தை இந்திய அழகிகள் சிலர் வென்றிருந்தாலும் உலக அழகி என்றாலே பலருக்கும் நினைவு வருவது ஐஸ்வர்யா தான். ஆமா பெரிய ஒலக அழகி ஐஸ்வர்யா என்று பலர் கூறுவதை கேட்கலாம்.

மாடலிங்

மாடலிங்

மாடலிங் உலகில் இருந்து நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பச்சன் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு ஆராத்யா என்ற மகளுக்கு தாயாகினார்.

தந்தை

தந்தை

ஐஸ்வர்யா ராய்க்கு தனது தந்தை கிருஷ்ணராஜ் என்றால் மிகவும் பிடிக்கும். தாயை விட தந்தையிடம் நெருக்கமாக இருந்தார் ஐஸ்வர்யா. கிருஷ்ணராஜ் கடந்த மார்ச் மாதம் உயிர் இழந்தபோது ஐஸ்வர்யா சோகத்தில் ஆழ்ந்தார்.

மகள்

மகள்

ஐஸ்வர்யாவுக்கு தனது மகள் ஆராத்யா என்றால் உயிர். எங்கு சென்றாலும் ஆராத்யாவை உடன் அழைத்துச் செல்வார். மகளை பார்த்து பார்த்து பத்திரமாக வளர்த்து வருகிறார் ஐஸ்வர்யா.

English summary
Aishwarya Rai Bachchan has completed 20 years in the film industry. She made her debut through ace director Mani Ratnam's Iruvar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil