»   »  பட்டது போதும் சாமி, நான் மாட்டேன்: இயக்குனரிடம் ஐஸ்வர்யா ராய் அடம்?

பட்டது போதும் சாமி, நான் மாட்டேன்: இயக்குனரிடம் ஐஸ்வர்யா ராய் அடம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஃபேனி கான் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிக்க மறுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அனில் குமார், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்து வரும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

அனில் கபூர் நடிப்பதுடன் பாடலும் பாடுகிறார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் இயக்குனரிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாதவன்

மாதவன்

ஃபேனி கான் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் மாதவன் நடிப்பதாக இருந்தது. ஆனால் மாதவன் அதிக சம்பளம் கேட்டதால் ராஜ்குமார் ராவை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

முன்னதாக ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடித்தார்.

பிரச்சனை

பிரச்சனை

ஐஸ்வர்யா ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்தது அவரது கணவர், மாமனார், மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனால் தற்போது எச்சரிக்கையுடன் உள்ளார்.

English summary
According to reports, Aishwarya Rai is not ready to act in intimate scenes in her upcoming movie Fanny Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X