»   »  ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு: மிரண்டு போய் கிடக்கும் பாலிவுட்

ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு: மிரண்டு போய் கிடக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்ததும், பின்னர் பிரிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்கள் காதலர்களாக இருந்தபோது படங்களில் சேர்ந்து நடித்தார்கள்.

அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஏன் ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

ஏ தில் ஹை முஷ்கில்

ஏ தில் ஹை முஷ்கில்

கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் கான் நடித்துள்ளார். பாகிஸ்தான் நடிகர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளது.

சல்மான் கான்

சல்மான் கான்

ஏ தில் ஹை முஷ்கில் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது பற்றி அறிந்த சல்மான் கான் அதை ரிலீஸ் செய்ய உதவி செய்து வருகிறாராம். ஐஸ்வர்யாவின் படத்தை ரிலீஸ் செய்ய சல்மான் உதவுவதை பாலிவுட்காரர்கள் பாராட்டுகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என்றும், ஆனால் கதையும், இயக்குனரும் வழக்கத்தை விட அற்புதமாக இருந்தால் மட்டுமே நடிப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தை விளம்பரப்படுத்த ஐஸ்வர்யா ராய் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் அவர்கள் சேர்ந்து நடித்த ஹம் தில் தே சுகே சனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

English summary
Bollywood actress Aishwarya Rai said that she is ready to share screen space with former lover Salman Khan on one condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil