»   »  ஓமைகாட்: கணவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

ஓமைகாட்: கணவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கணவர் அபிஷேக் பச்சனின் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து குச் நா கஹோ, குரு மற்றும் சர்க்கார் ராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா, அபிஷேக்கை வைத்து படம் தயாரிக்க நினைத்தார் இயக்குனர் அனுராக் கஷ்யப்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

அனுராக் கஷ்யப் தயாரிக்கும் பாலிவுட் படம் குலாப் ஜாமூன். அந்த படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது.

மறுப்பு

மறுப்பு

குலாப் ஜாமூன் படக் கதையை கேட்ட ஐஸ்வர்யா தனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். கதையை மாற்றிவிட்டு வாங்க பிடிச்சிருந்தால் நடிக்கிறேன் என்று பின்னர் கூறினாராம்.

படம்

படம்

ஐஸ்வர்யா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் கணவரின் படமாக இருந்தாலும் கூட நடிக்க முடியாது என்று தில்லாக கூறியுள்ளார்.

அடுத்து

அடுத்து

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அடுத்ததாக அனில் கபூரின் ஃபேனி கான் படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் படத்திற்கும் ஓகே சொல்லியுள்ளார்.

English summary
It was reported that Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan might share screen space in Anurag Kashyap's Gulab Jamun. But it seems, Aishwarya has become very choosy regarding her movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil