»   »  சரியாக சாப்பிடாமல், தூங்காமல் எப்பொழுதும் சோகமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்

சரியாக சாப்பிடாமல், தூங்காமல் எப்பொழுதும் சோகமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தந்தையை நினைத்து ஐஸ்வர்யா ராய் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளாராம்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

கடந்த வாரத்தில் இருந்து கிருஷ்ணராஜ் ராய் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். அப்படி இருக்கும்போது தந்தை ஐசியுவில் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சோகத்தில் உள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

கிருஷ்ணராஜ் ராயின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் ஐஸ்வர்யா சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உள்ளார். இரவு நேரத்தில் மருத்துவமனையில் கண்விழித்து பொழுதை கழிக்கிறார்.

அபிஷேக்

அபிஷேக்

ஐஸ்வர்யா ராய் கடந்த சில நாட்களாக தன்னையே மறந்து சரியாக சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு கவலை அளித்துள்ளது. இருப்பினும் நிலைமையை புரிந்து கொண்டு அபிஷேக் ஐஸ்வர்யாவிடம் எதுவும் சொல்வது இல்லையாம்.

English summary
Aishwarya Rai Bachchan is very stressed out these days because of her father's critical condition. As per reports she had started ignoring herself and was spending sleepless nights and when Abhishek came to know about this he left everything to be with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil