»   »  கொலவெறியில் பச்சன்கள்: கரண் பட விளம்பர நிகழ்ச்சியை புறக்கணிக்கும் ஐஸ்வர்யா ராய்?

கொலவெறியில் பச்சன்கள்: கரண் பட விளம்பர நிகழ்ச்சியை புறக்கணிக்கும் ஐஸ்வர்யா ராய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது குடும்பத்தார் கோபத்தில் இருப்பதால் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பது பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

அந்த காட்சிகளால் ஐஸ்வர்யா ராயின் வீட்டிலும் பிரச்சனை என்று கூறப்படுகிறது.

பச்சன்கள்

பச்சன்கள்

ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகளால் அவரது கணவர் அபிஷேக் பச்சன் அதிலும் குறிப்பாக மாமனார் அமிதாப் பச்சன் கோபத்தில் உள்ளார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தனது குடும்பத்தார் கோபத்தில் இருப்பதால் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்

விளம்பரம்

யார், யார் படங்களையோ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் அமிதாப் மற்றும் அபிஷேக் ஐஸ்வர்யா ராயின் ஏ தில் ஹ முஷ்கில் படத்தை கண்டுகொள்ளவே இல்லை.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக ஒரு பிரபல அழகு சாதன நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனம் ஐஸ்வர்யாவுக்கு பதில் நடிகை பிரியங்கா சோப்ராவை பிராண்ட் அம்பாசிடராக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Buzz is that Bollywood actress Aishwarya Rai is not promoting Ae Dil Hai Mushkil just to please her household.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil