»   »  ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்

ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கி ரசிகர்களுடன் டச்சில் இருக்க விரும்பும் நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் தடுக்கிறாராம்.

பாலிவுட் நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் டச்சில் உள்ளனர். இந்நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்க நடிகை ஐஸ்வர்யா ராய் ஆசைப்படுகிறார்.

ஐஸ்வர்யாவின் ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாராம் அவரது கணவர் அபிஷேக் பச்சன்.

அபிஷேக்

அபிஷேக்

அபிஷேக் பச்சன், அவரது தந்தையும், நடிகருமான அமிதாப் பச்சன் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். ஆனால் ஐஸுக்கு மட்டும் தடா.

கிண்டல்

கிண்டல்

அபிஷேக் பச்சனை நெட்டிசன்கள் அவ்வப்போது கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். அவர் ட்வீட்டினால் கிண்டலாக கமெண்ட் போடுகிறார்கள்.

ஐஸ்

ஐஸ்

சமூக வலைதளங்களில் தன்னை போன்று கேலி, கிண்டலுக்கு ஆளாக வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் தான் அபிஷேக் ஐஸ்வர்யா ராயை ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கம் வர விடாமல் தடுக்கிறாராம்.

பாசம்

பாசம்

அபிஷேக் பச்சன் எப்பொழுதுமே தனது மனைவி ஐஸ்வர்யாவை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில் தான் அவரை சமூக வலைதளங்கள் பக்கம் வர விடாமல் தடுக்கிறாராம்.

English summary
Aishwarya Rai is one of the few Bollywood actresses, who have maintained a safe distance from various digital platforms. But as per the recent reports, the diva wants to join the social media bandwagon now. But her husband Abhishek Bachchan is dead against it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil