»   »  பாலிவுட்டிற்கு பறந்தார் "காக்கா முட்டை" ஐஸ்வர்யா ராஜேஷ்!

பாலிவுட்டிற்கு பறந்தார் "காக்கா முட்டை" ஐஸ்வர்யா ராஜேஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்காமுட்டை படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை' படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து, திறமையான நடிகை என்ற பெயரை இவர் பெற்றார்.

கை நிறைய படங்கள்...

கை நிறைய படங்கள்...

அதனைத் தொடர்ந்து ஆறானது சினம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தற்போது இடம் பொருள் ஏவல், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை என கைநிறைய படங்களுடன் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.

பாலிவுட் படம்...

பாலிவுட் படம்...

இந்நிலையில், இந்திப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் ஐஸ்வர்யா. முதல் படமே அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்திற்கு டாடி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிப்பிற்கு வாய்ப்புள்ள வேடம்...

நடிப்பிற்கு வாய்ப்புள்ள வேடம்...

தமிழைப் போலவே இப்படத்திலும் ஐஸ்வர்யாவிற்கு தைரியமான, நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள வேடமாம். காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன, அர்ஜூன் அவரை தனது புதுப்பட நாயகியாக்கி இருக்கிறாராம்.

காக்காமுட்டை...

காக்காமுட்டை...

முன்னதாக இந்தப் படக்குழுவில் உள்ள ஒரு பெண் தான் காக்காமுட்டை படத்தைப் பார்த்துள்ளார். பின்னர் அவர் கூறியதன் பேரில் தான் அர்ஜூன் காக்காமுட்டை படத்தைப் பார்த்தாராம்.

மிகப்பெரிய சவால்...

மிகப்பெரிய சவால்...

"பாலிவுட்டில் அறிமுகமாவது பெரிய சவாலான விசயம். எனவே, கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வேன்' என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Aishwarya Rajesh, who impressed critics and audiences alike with her performance in National Award-winning Tamil drama "Kaaka Muttai", has landed the leading role opposite actor Arjun Rampal in her Bollywood debut.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil