சைடு கேப்பில் சினேகாவின் வயதை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா... வாயை பிளக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகை சினேகாவுடனான பழைய நினைவுகளை பகிர்கிறேன் என்ற பெயரில் சினேகாவின் வயதை வெளிப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதைக் கேட்டு பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அதோடு இருவரின் அழகையும் பாராட்டி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.

சீன மொழியில் ரிலீசாகும் கனா

சீன மொழியில் ரிலீசாகும் கனா

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்ற கனா, நாளை சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. Yi Shi Films சார்பில் AlexiWoo, SarinaYuanfeiWang தமிழ் மொழியில், சீன மொழி சப் டைட்டிலுடனும், நேரடி சீன மொழியிலும் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

 ரஜினியை மிஞ்சுவாரா ஐஸ்வர்யா

ரஜினியை மிஞ்சுவாரா ஐஸ்வர்யா

ரஜினி நடித்த 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் வெளியாகும் தமிழ்ப்படமாக இப்படம் சாதனை படைக்கவுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படக்குழுவினரை நடிகர் சத்யராஜ் சீன மொழியில் வாழ்த்தியுள்ள வீடியோவும் வைரலானது.

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் துவங்கப்பட உள்ள சூர்யா - பாலா இணையும் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு விளம்பர படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.

சினேகா வயசை சொன்ன ஐஸ்வர்யா

சினேகா வயசை சொன்ன ஐஸ்வர்யா

சினேகாவோடு இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் தற்போது நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவரை பற்றி சிறு வயது நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 'எனக்கு சிறுவயதாக இருக்கும்போது ஐதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஒன்றை பார்த்தபோது நீண்ட நேரமாக ஒரு ஓரமாக நின்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் அம்மா என்னை 'போதும் வா' என அழைத்தார்கள். ஆனால் நான் செல்லாமல் சினேகாவை வியந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் எவ்வளவு வியப்போடு அவரைப் பார்த்தேனோ இப்போது அவருடன் நடிக்கும்போதும் அதே ஆச்சர்யத்தோடு அவரை பார்க்கிறேன்' என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X