ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட ஹீரோ இவரா...ஷுட்டிங் எப்போ
சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடித்த திட்டம் இரண்டு படம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
Recommended Video
இதைத் தொடர்ந்து தமிழில் பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பூமிகா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

பிரபு தேவாவிற்கு ஜோடி
இதற்கிடையில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறாராம். குலேபகாவலி படத்தை இயக்கிய டைரக்டர் கல்யாண், இரண்டாவது முறையாக பிரபுதேவாவை வைத்து படம் எடுக்க உள்ளதாக பல காலமாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த படம் உறுதியாகி விட்டதாம்.

பெயரிடப்படாத படம்
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழு உறுதி செய்யப்பட்ட உடன் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. இதற்கிடையில் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஷுட்டிங் ஆரம்பமாயிடுச்சா
இந்த படத்தின் ஷுட்டிங், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு முன் பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறதாம். பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் முக்கியமான காட்சிகள் அடுத்த 10 நாட்களுக்கு புதுச்சேரியில் எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் படம் பற்றிய மற்ற தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளதாம்.

அடுத்தடுத்த தமிழ் படங்களில் பிரபுதேவா
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு திரும்பி உள்ள பிரபுதேவா தற்போது பொன்மாணிக்கவேல், யங் மங் சங், ஊமை விழிகள், பகீரா, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சைக்கோ த்ரில்லர் படமான பகீரா ரிலீசுக்கு தயாராக உள்ளது. பொய்க்கால் குதிரை படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது.

போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா
பொய்க்கால் குதிரை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது. இதில் பிரபுதேவா, மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். இதற்கிடையில் அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. பொன் மாணிக்கவேல் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு தேவா நடித்து வருகிறார்.

மீண்டும் பாடல் எழுதும் பிரபுதேவா
தமிழ் படங்களில் நடிப்பதுடன் தேவி 2 படத்திற்கு பிறகு யங் மங் சங் படத்திற்காக பாடலும் எழுத உள்ளார் பிரபுதேவா. இதற்கு முன் சார்லி சாப்ளின் 2 படத்திலும் ஒரு பாடலை பிரபுதேவா எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications











