»   »  'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்

'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனுஷுடன் நடிக்கும் ஆசை நிறைவேறிய ஐஸ்வர்யா- வீடியோ

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' படத்தின் மூலம் தமிழில் பேசப்படும் நடிகையானார்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே தனுஷுடன் இணைந்து நடிக்கவேண்டும் என விரும்பியதாகவும், அது கொஞ்சம் லேட்டாக நிறைவேறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' படத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படத்தை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தனர். தற்போது தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனுஷுடன் நடிப்பது

தனுஷுடன் நடிப்பது

இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், " 'காக்கா முட்டை' படத்தில் தனுஷின் தயாரிப்பில் நடித்தபோது, எதிர்காலத்தில் எப்படியாவது அவருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்த மாதிரி அது உடனே நடக்கவில்லை. தனுசஷுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது.

பல நடிகைகள் மாறி

பல நடிகைகள் மாறி

இப்போது 'வடசென்னை' படத்தின் மூலம் அது நனவாகியிருக்கிறது. நான் நடித்துவரும் குப்பத்துப் பெண் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தார். அதன்பிறகு சமந்தா நடிக்கவிருந்தார். இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தனுஷுடன் நடிக்க வேண்டுமென்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்ததால் தானோ என்னவோ அந்த வாய்ப்பு வேறு யாருக்கும் செல்லாமல் என்னைத்தேடி வந்துவிட்டது. தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்', மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் சில நாட்கள் நடிக்க கஷ்டமாக இருந்தது. பிறகு இயக்குனர் பாணிக்கு நான் என்னை மாற்றிக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Aishwarya Rajesh has acted opposite to Dhanush in 'Vadachennai' directed by Vetrimaran. Aishwarya said that she wanted to play with Dhanush while acting in 'Kaakkaa muttai'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X