»   »  சுஷ்-ஐஸின் ராணி சண்டை!

சுஷ்-ஐஸின் ராணி சண்டை!

Subscribe to Oneindia Tamil

சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் இடையே ஜான்சி ராணி லக்குமி பாய் படம் தொடர்பாக சத்தம் இல்லாமல் ஒரு சச்சரவு நடந்து முடிந்துள்ளதாம்.

ஐஸ்வர்யா ராய் கல்யாணத்திற்கு முன்பு ஒப்புக் கொண்ட படம் ஜான்சி ராணி லக்குமி பாய். இப்படத்தை கேத்தன் மேத்தா தயாரிக்கிறார். இப்படத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எடுக்க மேத்தா திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் சுஷ்மிதா சென் நடிக்க ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாக புதிய செய்தி வெளியானது. இப்படத்தை சொந்தமாக தயாரித்து, தானே ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கப் போவதாகவும் சுஷ்மிதா சென் அறிவித்தார்.

இதனால் குழப்பம் ஏற்பட்டது. இரண்டு படங்களும் ஒரே கதை என்பதால் இது தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பும் என பேச்சு கிளம்பியது. சுஷ்மிதா சென்னுக்குப் போட்டியாகவே ஐஸ்வர்யா ராய் இப்படி நடிக்கக் கிளம்பியுள்ளதாகவும் பேச்சு எழுந்தது.

பிரச்சினையைத் தீர்க்க கேத்தன் மேத்தா களத்தில் குதித்தார். சுஷ்மிதா சென்னை அணுகி, ஏற்கனவே இந்தப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொண்டதை சுஷ்மிதாவிடம் விளக்கினார்.

கேத்தன் மேத்தாவின் கருத்தை ஏற்றுக் கொண்ட சுஷ்மிதா சென் புதிய உடன்பாட்டுக்கு சம்மதித்தார். அதன்படி சுஷ்மிதா சென்னின் படம் ஆங்கிலத்தில் மட்டும் தயாராகுமாம். ஐஸ்வர்யாவின் படம் இந்தியில் மட்டும் வெளியாகுமாம்.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து ஜான்சி ராணியால் ஏற்படவிருந்த பெரும் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil