»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்து பட வெற்றியால், திவ்யாஸ் பந்தனாஸ் என்ற ரம்யாவுக்கு கோலிவுட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பெங்களூருக்குப் போய், புதுமுகங்களை தேடி பிடித்து நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்திய வகையில் பல கதாநாயகிகள்தமிழக்குக் கிடைத்துள்ளார்கள். அவர்களில் சிலர் ஜெயித்தும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யாரும் தமிழில் காலூான்றியதில்லை. அதற்கு விதிவிலக்காக ரம்யாஅமைவார் போலத் தெரிகிறது.

அசர வைக்கிற உயரம், கிறங்க வைக்கும் வாளிப்பான உடல்வாகு என்று ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார் ரம்யா. விரல்வித்தை நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் இவர் குத்திய குத்தில் கோடம்பாக்கமே சொக்கிப் போயுள்ளது.

துணிகள்விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதேயில்லை என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.

தமிழுக்கு வரும் முன்பு, கன்னடத்தில் இவர் நடித்த அபி, எக்ஸ்கியூஸ் மீ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றனஎன்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரம்யா நடித்து வெளிவந்த ரங்கா எஸ்.எஸ்.எல்.சிஎன்ற கன்னட படமும் ஹிட்டாகி விட, இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

ஆனாலும் அம்மணிக்கு கன்னடம் பிடிக்கவில்லையாம். தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் என்கிறார். காரணம் பணம்மட்டுமல்ல..அது இவரிடம் பணம் நிறையவே இருக்கிறது. தமிழில் நடித்தால் கிடைக்கும் புகழ் காரணமாகவே கன்னடத்தைவிடதமிழையே இவர் அதிகம் விரும்பக் காரணமாம். அதனால்தான் ஐ லைக் டமில் என்கிறார் ரம்யா.

பேட்டி எடுக்க யார் வந்தாலும், நான் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி, படிப்புக்காக லண்டன் போனேன்;வீட்டு ஞாபகம் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இந்தியா வந்து விட்டேன் என்று சொல்லி வந்தார்.

இவரது இந்த பேட்டி, எஸ்.எம்.கிருஷ்ணாவை எரிச்சல்படுத்தியிருக்கிறதாம். தூரத்துச் சொந்தம் என்பதற்காக அநாவசியமாக என்பெயரை இழுக்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறாராம். இப்போது அந்த விஷயம் பற்றி ரம்யா கப்சிப்.

தமிழில் இப்போது இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற படத்திலும், சிம்புவின் அடுத்த படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே ரம்யாவின் ஸ்டில்ஸை பத்திரிக்கைகளில் பார்த்து விட்டு, அடுத்த படத்தில்தனக்கு ஜோடி இவர்தான் என்று விஜயகாந்த் முடிவெடுத்து விட்டாராம்.

வரவர கேப்டனின், ஜொள்ளுக்கு அளவில்லாமல் போய் விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil