»   »  வில்லியான ஐஸ்வர்யா

வில்லியான ஐஸ்வர்யா

Subscribe to Oneindia Tamil

கதாநாயகியாக அறிமுகமாகிய ஐஸ்வர்யா இப்போது வில்லி கேரக்டரில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

லட்சுமியின் மகள் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா. அவர் நேரத்துக்கு படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

பார்த்திபனின் உள்ளே வெளியே, அவரது குரு பாக்யராஜின் ராசுக்குட்டி ஆகிய படங்களில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு எக்குத்தப்பாக நடித்தார். அதுவும் கை கொடுக்காமல் பிறகு அக்கா, அண்ணி ஆகிய வேடங்களில் நடித்தார்.

கடைசியாக அவர் நடித்து தமிழில் வெளிவந்த படம் நியூ. அதில் லேடி ரகுவரன் மாதிரி நடிக்கிறேன் என்று அநியாயத்துக்குலூட்டி அடித்தார். எடுபடாமல் போயிற்று.

இந் நிலையில்தான் இப்போது வில்லி கேரக்டருக்குத் தாவியுள்ளார். இது தமிழ்ப் படத்தில் அல்ல. தெலுங்குப் படமொன்றில்தான்இந்த கேரக்டரைச் செய்கிறார். கவர்ச்சி கலந்து வில்லி வேடமாம்.

விரைவில் தமிழ் படமொன்றிலும் முழு நீள வில்லி கேரக்டர் செய்யவிருக்கிறாராம். காமெடி ஆகாமல் இருந்தால் சரிதான்.

அம்மா ஆன அல்போன்ஸா:

ஐஸ்வர்யாவைப் போலவே, வாய்ப்பு கிடைக்காததால் அம்மா வேடங்களில் நடிக்க வந்து விட்டார் கவர்ச்சி நடிகைஅல்போன்ஸா.

ரஜினியின் பாட்ஷா படத்தில் கவர்ச்சி டான்ஸராக அறிமுகமாகியவர் அல்போன்ஸா. தில் படத்தில் மச்சான் மீசை வீச்சருவாபாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன்பின்பு வரிசையாக சில படங்களில் தலைகாட்டியவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

இதனால் மலையாளம், தெலுங்குப் படங்களில் ஆடப் போனார். அங்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

இப்போது ஆடுவதற்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட தாய் மொழியான மலையாளத்தில் சில வாய்ப்புகள்வரத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே சொல்லி சந்தோஷப்பட முடியாத கேரக்டர்கள்.

பின்னே ஒரு இரண்டாவது கதாநாயகியாகவோ, கதாநாயகிக்கு அக்காவாகவோ நடித்தால் வெளியே சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். அம்மா கேரக்டர் என்றால்?

ஆமாம், சமீபத்தில் திலீப்புடன் ஒரு படத்தில் கேரக்டர் ரோலில் நடித்துள்ளார் அல்போன்ஸா. அதில் இளம் வயது திலீப்பின்அம்மாவாக வருகிறாராம். படத்தில் அவருக்கு கேபரே ஆடும் பெண் ரோலாம்.

தமிழிலும் விரைவில் அம்மா வேடத்திற்கு வரவிருக்கிறாராம் அல்போன்ஸா.

Please Wait while comments are loading...