»   »  'அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு'- கன்னட நடிகை ஹர்ஷிகா!

'அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு'- கன்னட நடிகை ஹர்ஷிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துக்காக துடிக்கும் கன்னட நடிகை ஹர்ஷிகா!- வீடியோ

பெங்களூரு : நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாம்.

'அஜித் பெயரிலேயே பவர் இருக்கிறது. அஜித் ரசிகையாக இருப்பதே எனது பலம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் ஹர்ஷிகா.

கன்னட நடிகை

கன்னட நடிகை

கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் 'ஜாக்கி' படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது 'சார்மினார்' எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் ரசிகை

இவர் தான் ஒரு அஜித் ரசிகை என்றும், அதுவே தனது பெரிய பலம் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அஜித்தோடு நடிப்பது என் வாழ்நாள் கனவு, அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிம்புவுடன் முத்தம்

சிம்புவுடன் முத்தம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹர்ஷிகா ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். மலேசிய ஹோட்டல் ஒன்றில் சிம்புவுடன், ஹரிஷிகா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வாட்ஸ்-அப், சமூக வலைதளங்களில் பரவியது.

மறுப்பு

மறுப்பு

சிம்புவுடன் எனக்கு ரொம்ப பழக்கம் இல்லை என ஹர்ஷிகா மறுத்தார். சிம்புவும் இது உண்மையில்லை எனக் கூறினார். அந்த சர்ச்சை ஒருவழியாக கடந்து போனது. இந்நிலையில், அஜித் ரசிகை என அவர் கூறியிருப்பதால், அஜித் ரசிகர்கள் அவரை வரவேற்று வருகின்றனர்.

English summary
Actor Ajith has big fan base across South India. Kannada actress Harshika Poonaacha is a big fan of Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil