»   »  ஜெயம் ரவியின் போகனுக்காக காக்கி மாட்டும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி'

ஜெயம் ரவியின் போகனுக்காக காக்கி மாட்டும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவியின் போகனில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் நடிகை அக்ஷரா கவுடா.

ஆரம்பம் படத்தில் ஆர்யாவுடன் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று ஆடிப்பாடி தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் அக்ஷரா.


ஆரம்பம் படத்துக்குப் பின் காணாமல் போன அக்ஷராவை தற்போது ஜெயம் ரவியின் போகன் திரைப்படம் மீட்டு வந்திருக்கிறது.


அக்ஷரா கவுடா

அக்ஷரா கவுடா

கன்னடத்து அழகியான அக்ஷரா நடிகையாக அறிமுகமானது தமிழ் மொழியில் தான். சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு 420 படத்தில் அறிமுகமான அக்ஷரா தொடர்ந்து துப்பாக்கி, ஆரம்பம் மற்றும் இரும்புக்குதிரை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.


ஆரம்பம்

ஆரம்பம்

துப்பாக்கி, இரும்புக்குதிரை படங்களில் சிறிய வேடத்தில் நடித்த அக்ஷராவுக்கு அஜீத்தின் ஆரம்பம் படம் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தது. மேலும் தீக்ஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற, ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.


போகன்

போகன்

இந்நிலையில் சிலகாலம் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த அக்ஷரா தற்போது ஜெயம் ரவியின் போகன் படம் மூலம் மீண்டு வந்திருக்கிறார். ரோமியோ ஜூலியட் புகழ் லட்சுமணன் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியுடன் இணைந்து அவர் நடிக்கிறார்.


முதன்முறையாக

முதன்முறையாக

இப்படத்தில் நடிப்பது குறித்து அக்ஷரா "முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. அதுகுறித்து நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் வாய்ப்பு போகன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.


டண்டணக்கா

டண்டணக்கா

ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்ற டண்டணக்கா பாடல் போல இப்படத்தில் எனக்கும், ஜெயம் ரவிக்கும் ஒரு அறிமுகப் பாடல் உள்ளது. இந்தப் பாடலை லட்சுமணன் எழுத ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். வரும் 18 ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதலில் பாடலையும் பின்னர் ஆக்ஷன் காட்சிகளையும் எடுக்க இயக்குநர் லட்சுமணன் முடிவு செய்திருக்கிறார்" இவ்வாறு அக்ஷரா தெரிவித்திருக்கிறார்.


அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

ஜெயம் ரவியுடன் இணைந்து அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தனி ஒருவன், மிருதன் போல இப்படமும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Actress Akshara Gowda, who plays one of the leading ladies in Jayam Ravi's upcoming Tamil actioner Bogan, will be essaying the role of a police officer in the film, which is slated to go on floors from Friday (March 18).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil