»   »  பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்?

பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க அக்ஷரா ஹாஸன் மறுத்துவிட்டாராம்.

கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இயக்குனராகும் ஆசையில் பாலிவுட் படங்களில் பணியாற்றி வந்தார். அவர் இயக்குனராக விரும்பும்போதிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

அப்படி வந்த பல வாய்ப்புகளை ஏற்க மறுத்த அவர் ஒரு வாய்ப்பை மட்டும் ஏற்றுக் கொண்டார்.

ஷமிதாப்

ஷமிதாப்

ஆர். பால்கி தன்னை அணுகி நடிக்குமாறு கேட்டபோது அக்ஷரா ஹாஸன் மறுப்பு தெரிவிக்காமல் அவரின் ஷமிதாப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கப்பார் சிங் 2 படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்குமாறு அக்ஷராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ பவன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அக்ஷரா

அக்ஷரா

முதலில் பாலிவுட்டில் தனக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டு அதன் பிறகு தெலுங்கு, தமிழ் சினிமா பக்கம் வரலாம் என்று இருக்கிறாராம் அக்ஷரா.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

கப்பார் சிங் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்தார். இந்நிலையில் கப்பார் சிங் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க அக்ஷரா மறுத்துள்ளார்.

English summary
Akshara Haasan has reportedly refused to act in Pawan Kalyan's upcoming movie Gabbar Singh 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil