»   »  மூத்த வினியோகஸ்தரை திட்டிய அக்ஷரா ஹாஸன்: திமிர் என்கிறது பாலிவுட்

மூத்த வினியோகஸ்தரை திட்டிய அக்ஷரா ஹாஸன்: திமிர் என்கிறது பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்திரிகையாளர் சந்திப்பின்போது அக்ஷரா ஹாஸன் நடந்து கொண்ட விதம் பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

பிரபல பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷாவின் மகன் விவான் ஷா, உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள இந்தி படம் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது.

பேட்டி

பேட்டி

படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார் அக்ஷரா ஹாஸன். இந்த சந்திப்புக்கு சீனியர் வினியோகஸ்தரான சன்னி கன்னா ஏற்பாடு செய்திருந்தார்.

அக்ஷரா

அக்ஷரா

பேட்டி நீண்டு கொண்டே போனதால் அக்ஷரா கடுப்பாகி முணுமுணுக்கத் துவங்கினார். கன்னாவை அழைத்து 6 மணிக்கு பேட்டியை முடித்துக் கொள்ள வேண்டும் என்றார் அக்ஷரா.

கோபம்

கோபம்

பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுக்க காத்திருக்க 6 மணி ஆனதும் அக்ஷரா கிளம்பினார். மேலும் கன்னாவையும் திட்டினார் அக்ஷரா. இதை பார்த்த அந்த பத்திரிகையாளர் சமாதானம் செய்ய வர அவருக்கு டோஸ் விட்டார் அக்ஷரா.

பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

பத்திரிகையாளரை திட்டிய பிறகு என்ன நினைத்தாரோ மீண்டும் இருக்கையில் அமர்ந்து பேட்டி அளித்துவிட்டு கிளம்பினார் அக்ஷரா. மூத்த வினியோகஸ்தர் மற்றும் பத்திரிகையாளரை அக்ஷரா திட்டியது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
Akshara Haasan has reportedly scolded a senior distributor and a journalist while promoting her upcoming movie Laali ki Shaadi Mein Laaddoo Deewana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil