»   »  அக்ஷரா ஹாஸனுக்கு இப்படியும் ஒரு ஆசையா?: கமல் மகளாச்சே

அக்ஷரா ஹாஸனுக்கு இப்படியும் ஒரு ஆசையா?: கமல் மகளாச்சே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மொட்டை தலையுடன் படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இயக்குனராகும் ஆசையில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அதன் பிறகு பால்கியின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானார்.

தற்போது அவர் அஜீத்தின் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில்,

படம்

படம்

ஒரு படத்திலாவது மொட்டை தலையுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட படம் எதுவும் எனக்கு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே மொட்டையடித்து நடிப்பேன்.

குழந்தை

குழந்தை

நான் மொட்டை அடிப்பது புதிது அல்ல. சிறு வயதில் எனக்கு நீளமான முடி கிடையாது. ஒரு நாள் அப்பாவிடம் போய் மொட்டை தலை எப்படி இருக்கும் என்று கேட்டேன்.

மொட்டை

மொட்டை

மொட்டை தலை தானே வா காட்டுகிறேன் என்று கூறி அப்பா என்னை குளியல் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மொட்டை அடித்துவிட்டார். அப்போது எனக்கு வயது 7.

அப்பா

அப்பா

மொட்டை அடித்தது நன்றாக இருந்தது. நானும் அப்பாவும் இப்படித் தான் ஏதாவது செய்து கொண்டிருப்போம் என அக்ஷரா தெரிவித்துள்ளார். அக்ஷரா தான் நடித்துள்ள இந்தி படமான லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.

முடி

முடி

கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு தன்னையே மாற்றிக் கொள்வதில் வல்லவர் கமல். அவர் மகளாச்சே அதனால் தான் படத்திற்காக துணிந்து மொட்டையடிக்க தயாராக உள்ளார். தந்தையை போன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க விரும்புகிறார் போல.

English summary
Actress Akshara Haasan is eagerly waiting to go bald for a movie. She is yet to get an opportunity to go bald.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil