»   »  'அந்த' சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமார் சிறந்தவர்: ஏமி ஜாக்சன்

'அந்த' சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமார் சிறந்தவர்: ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை விட சிறந்தவர் என நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஏமி. ரஜினி, ஏமி வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஏமியும், அக்ஷய் குமாரும் சேர்ந்து வரும் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து ஏமி கூறுகையில்,

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் ஒரு ஜாம்பவான். அவரை அப்படி சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. தினமும் படப்பிடிப்பில் அவரை பார்ப்பது, அவருடன் சேர்ந்து நடிப்பது அருமையான அனுபவம்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

நானும், அக்ஷய் குமாரும் சேர்ந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. நான் அவருடன் சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடன் சேர்ந்து நடிப்பது ஜாலியாக இருக்கும்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

அக்ஷய் குமாரை தென்னிந்திய திரையுலகின் பெரிய மனிதர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறுவது தவறு. அவரை அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.

அர்னால்ட்

அர்னால்ட்

அக்ஷய் குமாரை வில்லனாக போடுமாறு நான் ஷங்கரிடம் கூறவில்லை. அவர்கள் அர்னால்டை வில்லனாக்க திட்டமிட்டனர். ஆனால் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை விட அக்ஷய் குமார் சிறந்தவர் என நான் நினைக்கிறேன்.

English summary
Actress Amy Jackson thinks that Bollywood actor Akshay Kumar is better than Hollywood star Arnold.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil