»   »  ஒத்தைக்கு மறுக்கும் அக்ஷயா

ஒத்தைக்கு மறுக்கும் அக்ஷயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒண்டி ஆட்டம் ஆட முடியவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விடுகிறாராம் கலாபக் காதலன் அக்ஷயா.

கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சிம்ரனின் தங்கச்சியாக வந்து போனவர்தான் அக்ஷயா. அந்தப் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் பின்னர் வந்த கலாபக் காதலன் படம் அக்ஷயாவுக்கு அமோகமான அறிமுகத்தைக் கொடுத்தது.

அக்கா புருஷன் மீது ஆசைப்பட்டு அடைய முயலும் கள்ளக்காதல் வேடத்தில் கலக்கலாக நடித்திருந்தார் அக்ஷயா. ஆனால் அடுத்து வந்த பல பட வாய்ப்புகளும் இதேபோன்ற கேரக்டர்களே இருந்ததால், இதென்னடா வம்பாப் போச்சு என்று எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார் அக்ஷயா.

இதனால் அவரது கையில் படங்களே இல்லாத நில் பேலன்ஸ் நிலைமை ஏற்பட்டுப் போனது. இதை அறிந்து கொண்ட சிலர், அக்ஷயாவை அணுகி இப்படியே எத்தனை நாட்களுக்கு விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருப்பீர்கள். இப்போதெல்லாம் குத்துப் பாட்டுக்கு நல்ல கிராக்கி உள்ளது. வரும்படியும் அதிகம். பேசாமல் குத்துப் பாட்டுக்கு ஆடலாமே என்று அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

ஆனால் அப்படி கூறி தன்னை அணுகுகிறவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுகிறாராம் அக்ஷயா. நடித்தால் ஹீரோயினாக நடிப்பேன். இல்லாவிட்டால் அப்படியே இருந்து விடுவேன். ஆனால் கோடி கொடுத்தாலும் குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆடவே மாட்டேன் என்று பிடிவாதமாக கூறுகிறாராம் அக்ஷயா.

சமீபத்தில் விஷால் நடிக்கும் மலைக்கோட்டை படத்தில் செமத்தியான டான்ஸ் வாய்ப்பு இருக்கிறது, நல்ல சம்பளம் வர முடியுமா என்று கேட்டுள்ளனர். பல விதங்களிலும் அக்ஷயாவை பிரஷர் கொடுத்துப் பார்த்துள்ளனர். ஆனாலும் தனது முடிவிலிருந்து சற்றும் மாறாமல் ஸாரி சொல்லி விட்டாராம் அக்ஷயா.

புல்லரிக்கிறது அக்ஷயாவின் கொள்கைப் பிடிப்பைப் பார்த்தால்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil