»   »  படுக்கையறை காட்சியால் ஐஸ்வர்யா ராய் கணவர் இடையே கருத்து வேறுபாடு?

படுக்கையறை காட்சியால் ஐஸ்வர்யா ராய் கணவர் இடையே கருத்து வேறுபாடு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கரண் ஜோஹார் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்துள்ளது பச்சன்களை கோபம் அடைய வைத்துள்ளது.

படுக்கையறை காட்சியில் நடித்த ஐஸ்வர்யா மீது மாமனார் அமிதாப் பச்சனும், மாமியார் ஜெயா பச்சனும் கடும் கோபத்தில் உள்ளார்களாம்.

கரண்

கரண்

கரண் ஜோஹாரை தொடர்பு கொண்ட அமிதாப் பச்சன் நெருக்கமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் கரண் அவரின் பேச்சை கேட்கவில்லை.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

படத்தில் தனக்கும், ரன்பிர் கபூருக்கும் இடையே நெருக்கமான காட்சிகளை வைக்கச் சொன்னதே ஐஸ்வர்யா ராய் தானாம். கதையை கேட்ட அவர் என் கதாபாத்திரம் செக்ஸியாக இருக்க வேண்டும் என்றாராம்.

அபிஷேக்

அபிஷேக்

ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவரின் கணவர் அபிஷேக் பச்சன் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவே விரும்பிக் கேட்டு அந்த காட்சிகளில் நடித்ததை அறிந்து மேலும் கோபம் அடைந்துள்ளாாராம்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ஏ தில் ஹை முஷ்கில் பட விவகாரம் தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

English summary
According to reports, all is not well between Aishwarya Rai and hubby Abhishek Bachchan over Ae Dil Hai Mushkil movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil