»   »  ஒட்டி உறவாடிய ஷாருக்கான், தீபிகாவை எதிரியாக்கிய டிசம்பர் 18?

ஒட்டி உறவாடிய ஷாருக்கான், தீபிகாவை எதிரியாக்கிய டிசம்பர் 18?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பட ரிலீஸ் தேதி தொடர்பாக ஷாருக்கானுக்கும், தீபிகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள தில்வாலே படம் வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி ரிலீஸாகிறது. அதே தேதியில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடித்துள்ள பாஜிராவ் மஸ்தானி படம் ரிலீஸாக உள்ளது.

Shahrukh Khan

ஷாருக்கான், கஜோல் ஜோடி பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி. இந்நிலையில் அவர்கள் பல காலம் கழித்து ஜோடியாக நடித்துள்ள தில்வாலே படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் அந்த படம் தனது படத்தோடு ரிலீஸாவதை தீபிகா விரும்பவில்லையாம்.

இதையடுத்து தீபிகா ஷாருக்கானை அணுகி உங்களின் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்ளுங்களேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஷாருக்கான் தீபிகாவின் கோரிக்கையை ஏற்கவில்லை. நாம் கேட்டும் கூட இந்த ஷாருக் இப்படி செய்கிறாரே என்று அவர் மீது தீபிகாவுக்கு கோபமாம்.

பட ரிலீஸ் தொடர்பாக தீபிகா, ஷாருக் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கின்றது. தீபிகா ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shahrukh Khan and Deepika Padukone are known to be good friends but the date December 18, 2015 has caused bitter rivalry between the two. SRK's Dilwale and Deepika's Bajirao Mastani are set to clash as both the movies are releasing on the same date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil