»   »  காஜல் அகர்வாலால் டென்ஷனில் சமந்தா?

காஜல் அகர்வாலால் டென்ஷனில் சமந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனதா கராஜ் தெலுங்கு படம் தொடர்பாக சமந்தா காஜல் அகர்வாலால் டென்ஷனில் உள்ளாராம்.

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த ஜனதா கராஜ் தெலுங்கு படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ளார்.

பக்கா லோக்கல்

பக்கா லோக்கல்

ஜனதா கராஜில் பக்கா லோக்கல் என்ற குத்துப் பாடலுக்கு ஜூனியர் என்டிஆருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டிருக்கிறார் காஜல். அந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆகிவிட்டது.

காஜல்

காஜல்

படம் வெளியான பிறகு படக்குழுவினர் காஜல் அகர்வாலை வைத்து பல போஸ்டர்களை வெளியிட்டனர். கதாநாயகியான சமந்தாவை வைத்து ஒரேயொரு போஸ்டர் தான் வெளியானது.

கோபம்

கோபம்

படத்தின் ஹீரோயின் நான், என்னைவிட்டுட்டு அந்த காஜல் அகர்வாலுக்கு இப்படி முக்கியத்துவம் அளிப்பதா என சமந்தா கோபத்தில் உள்ளாராம். இதனால் தான் அவர் ஜனதா கராஜ் குழு கலந்து கொண்ட விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேட்டிக்கு வரவில்லையாம்.

சமந்தா

சமந்தா

ஜனதா கராஜ் விளம்பர நிகழ்ச்சியின்போது தான் தனது காதலர் நாக சைதன்யாவை சின்ன ஹீரோ என்று கூறி நாகர்ஜுனா குடும்பத்தாரின் கோபத்திற்கு ஆளானார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Samantha is not happy about Janata Garage team displaying too many post release posters featuring Kajal Agarwal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil