ராஷ்மிகாவிற்கு அல்லு அர்ஜுன் வைத்த செல்ல பெயர் என்னன்னு தெரியுமா ?
ஐதராபாத் : தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு அல்லு அர்ஜுன் வைத்துள்ள க்யூட்டான செல்ல பெயர் தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அறிமுக இயக்குனர் சுகுமாறன் இயக்கி உள்ள புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். படம், பாடலை தடை செய்யக் கோரி எதிர்ப்புக்கள் ஒரு பக்கம் எழுந்தாலும், அதையும் தாண்டி படத்தை பிரம்மாண்டமாக நாளை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

செல்ல பெயர் வைத்த அல்லு அர்ஜுன்
சமீபத்தில் புஷ்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மேடையில் பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவுடன் பணியாற்றியது பற்றியும் அவரை பற்றியும், ராஷ்மிகாவிற்கு தான் வைத்துள்ள செல்ல பெயர் பற்றியும் ஓப்பனாக பேசினார். அப்போது முதல் அல்லு அர்ஜுன் வைத்த பெயரை சொல்லியே சினிமா வட்டாரங்களில் ராஷ்மிகாவை பலரும் கூப்பிட துவங்கி விட்டனர்.

ஏன் அந்த பெயர்
அல்லு அர்ஜுன் பேசுகையில், ராஷ்மிகா மீது தேசிய அளவில் க்ரஷ் இருக்கு. அதனால் அவரை க்ரஷ்மிகா என்று தான் நான் செல்லப் பெயர் வைத்து கூப்பிடுகிறேன். நாம் பலருடன் பணியாற்றினாலும் சிலர் மீது தான் அன்பு வரும். அப்படி தான் ராஷ்மிகா. மிகவும் இனிமையான, எளிமையான, அழகான, மிகவும் புத்திசாலிதனமான, ரொம்ப ரொம்ப திறமையான பெண்ணும் கூட.

திறமையான நடிகை
ராஷ்மிகா ஏற்கனவே டாப் நடிகையாகி விட்டார். ஆனால் அவர் இன்னும் பல உயரத்திற்கு செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் அற்புதமான நடிகை. இனி வரும் காலங்களில் நல்ல படங்கள், நல்ல டைரக்டர்கள் அவருக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

குஷியான ரசிகர்கள்
ஏற்கனவே ராஷ்மிகாவை பக்கத்து வீட்டு பொண்ணு என்ற ஃபீலிங்குடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் வைத்துள்ள புதிய பட்ட பெயர் பலரையும் கவர்ந்துள்ளது. இதனால் ராஷ்மிகாவை அவரது ரசிகர்கள் க்ரஷ்மிகா என்றே கூப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











