Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
“கணம்“ அம்மாவாக நடித்ததில் பெருமை அடைகிறேன்… நடிகை அமலா நெகிழ்ச்சி !
சென்னை : கணம் படத்தில் அம்மாவாக நடித்ததில் பெருமை அடைகிறேன் என நடிகை அமலா கூறியுள்ளார்.
கணம் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
“உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது“… பத்மஸ்ரீ விருதுபெறுவோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

கணம்
ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் கணம். இந்தப் படத்திலிருந்து சமீபத்திலிருந்து தாய்மையைப் போற்றும் விதமாக ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் அம்மா பாடல் வெளியானது. மெலடியான இசையில் அம்மா மகன் உறவின் மேன்மையைச் சொல்லும் விதமாக இருந்த இந்த பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

சித் ஸ்ரீராமின் மாயாஜாலம்
அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை அமலா. கணம் படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். இதுகுறித்து கூறிய அமலா, மகனுக்கும், அம்மாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தை செய்து காட்டி உள்ளார்கள் என்றார்.

இதமாக உணர்கிறேன்
முதல் முறை அந்தப் பாடலை நான் கேட்கும் போது இதமாகவும், மென்மையாவும் உணர்ந்தேன். டைரக்டர் ஸ்ரீகார்த்திக்குக்கு தனது அம்மாவின் மீதிருக்கும் அன்பின் காரணமாகவே இந்தப் படம் உருவானது. இந்தப் பாடல் அந்த அன்பைப் பற்றியது. கண்டிப்பாக உங்களாலும் உணர முடியும் என்று நான் கூறினார்.

எனக்கு கிடைத்த பெருமை
கணம் படத்தில் அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமையாக உணர்கிறேன். நான் நிஜ வாழ்க்கையிலும் ஒரு தாய் தான். அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். நான் படத்தை முடிக்கும் வரை, எல்லோருக்கும் அம்மாவாகவே இருந்தேன். அது மிகவும் மதிப்புமிக்க விஷயம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்றார் நடிகை அமலா.