»   »  தமிழில் தான தடை போடுறீங்க!: சாண்டல்வுட்டுக்கு சென்ற அமலா பால்

தமிழில் தான தடை போடுறீங்க!: சாண்டல்வுட்டுக்கு சென்ற அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி படத்தின் கன்னட ரீமேக்கில் அமலா பால் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமலா பால் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தொடர்ந்து நடித்து வந்தது அவரது கணவரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அமலாவும், அவரது கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யும் பிரிந்துவிட்டனர்.

இருவரும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிப்பு

நடிப்பு

விஜய்யை பிரிந்த அமலா பால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது விவாகரத்து பிரச்சனையால் அவருக்கு வாய்ப்புகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமலா

அமலா

அமலா பாலை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்த வேளையில் அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் ஏ.எல். விஜய்யின் தந்தை அழகப்பனின் நட்பை மதித்து தயாரிப்பாளர்கள் அமலாவுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார்களாம்.

கன்னடம்

கன்னடம்

தமிழில் நிலைமை இப்படி இருக்க அமலாவுக்கு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஹீரோயின்

ஹீரோயின்

கன்னடத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கிறார். இந்த தகவலை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கேடஷ் உறுதி செய்துள்ளார். அமலா இது தவிர சுதீப்பின் ஹெப்புலி கன்னட படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amala Paul who played Shalini in Dhanush starrer VIP will reprise her role in the Kannada remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil