»   »  சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்!

சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலாபால், சத்யராஜுக்கு ஜோடியாக முருகவேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். திருமணத்திற்குப் பின் சில காலம் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்த அமலா பால், சமீபகாலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Amala Paul becomes Sathyaraj's pair

இதற்கிடையே விஜயும், அவரும் விவாவகரத்து வேண்டி நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனர். மீண்டும் அமலா பால் நடிக்கத் தொடங்கியதால் தான் இந்தப் பிரிவு எனக் கூறப்படுகிறது.

ஆனால், அடுத்த ரவுண்டுக்குத் தயாரான அமலாபாலுக்கு எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. இப்போதைக்கு தனுஷ் நடிப்பில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இந்நிலையில், சத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியாக அமலாபால் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 'முருகவேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Amala Paul becomes Sathyaraj's pair

ஜோஷி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக ரம்யா நம்பீசனும், கஞ்சா கருப்பு, பப்லு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் வெளியான லைலா ஓ லைலா வெற்றிப்படத்தின் ரீமேக் எனக் கூறப்படுகிறது.

பெங்களூர் மற்றும் கோவாவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். நாகன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

English summary
Amala Pual has finished shooting ‘Murugavel’ directed by Joshi in which she plays the young wife of veteran actor Sathyaraj who plays the role of a special agent of a special task force of the Indian government created to counter terrorism in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil