Amala Paul Birthday: ஒயின் பாட்டிலுடன் ஆட்டம் போடு அமலா பால்.. அடடே புருஷன் என்னமா தாங்குறாரு!
சென்னை: வெகு சில நடிகைகளுக்கு தான் அவர்கள் சினிமாவில் இருந்தாலும் இல்லை என்றாலும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். சில நடிகைகள் சினிமாவில் இருந்து விலகி விட்டால், அவர்களை பொதுவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இப்படி இருக்கையில், நடிகை அமலா பால் சினிமாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்களால் என்றைக்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்படியான, நிலையில், நடிகை அமலா பால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அவரது கணவர் தேசாய் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை அமலா பால் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த ஆண்டு அவர் தனது பிறந்த நாளின் போது அவரது மகன் இலாய் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாத குழந்தை, தாய் பால் கொடுக்க வேண்டியதாக இருந்ததால், அமலா பாலின் பிறந்த நாள் வீட்டில் மிகவும் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. ஆனால் இம்முறை மகனுக்கு ஒரு வயதைக் கடந்து விட்டதால், அமலா பால் வெளிநாட்டிற்குச் சென்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார்.

கொண்டாட்டம்: இது தொடர்பான புகைப்படங்களை அவரது கணவர் தேசாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மொத்தம் மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த மூன்று புகைப்படங்களிலும் அமலா பால், ஒரு கையில் பெரிய ஒயின் பாட்டிலையும், மற்றொரு கையில் கிளாசையும் வைத்துக் கொண்டு நிற்கிறார். இந்த புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்து: அவரது வாழ்த்துக் குறிப்பில், " உனக்கு வயது கூட கூட நீ ஒரு ஒயினைப் போல மாறிக் கொண்டே இருக்கிறாய். சுவையாக, சிறப்பாக, மிகவும் விலைமதிப்புள்ளதாக மாறிக் கொண்டே இருக்கிறாய். இது எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். தேசாய் மற்றும் அமலா பால் ஆகிய இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்னதாகவே இந்த தம்பதியர் கர்ப்பமானார்கள்.

ரசிகர்கள் வாழ்த்து: இப்படி இருக்கையில், அவர்கள் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதியரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் அமலா பாலின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டமும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











