அமலா பால் பர்த்டேவை எங்கே.. எப்படி கொண்டாடி இருக்காருன்னு பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் தனது 31வது பிறந்தநாளை லண்டனில் கலர்ஃபுல்லாக கொண்டாடி உள்ளார். அதன் பிரத்யேக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமலா பால் வரப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மைனா நந்தினி தான் எதுக்கு வந்தோம்னே தெரியாமல் இருக்கிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு அமலா பால் எந்தவொரு போஸ்ட்டும் போடலையே ஆள் எங்கே எஸ்கேப் ஆகிவிட்டார் என்று தேடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து லண்டனில் இருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

31 வயசு

31 வயசு

1991ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கேரளாவின் ஆலுவாவில் பிறந்த நடிகை அமலா பால் தனது 31வது பிறந்தநாளை நேற்று லண்டனில் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வாழ்த்திய பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

லண்டனில் பார்ட்டி

லண்டனில் பார்ட்டி

தனது 31வது பிறந்தநாளை லண்டனில் கோலாகலமாக கொண்டாடி உள்ளார் நடிகை அமலா பால். லண்டன் பிரிட்ஜில் நின்று கொண்டு அமலா பால் வெளியிட்டுள்ள இரவு நேர கலர்ஃபுல் க்ளிக்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடாவர் படம் ஓடிடியில் ரிலீஸான பிறகு அடுத்தடுத்து ஒரே ஜாலி டூர் அடித்து வருகிறார் அமலா பால்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நடிகை அமலா பால் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் கடந்து தனது வாழ்க்கையை தைரியமாக லீடு செய்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அமலா பால் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வாழ்த்தி வந்தனர். இந்நிலையில், பிரத்யேக பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த போஸ்ட்டுக்கு கீழ் ஹேப்பி பர்த்டே அமலா பால் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஒரே ஜாலி டூர் தான்

ஒரே ஜாலி டூர் தான்

சமீபத்தில் நடிகை அமலா பால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே பிகினியில் செம ஹாட்டாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வந்தார். இந்நிலையில், தற்போது லண்டனில் பிறந்தநாளை கொண்டாடி உள்ளதை பார்த்த ரசிகர்கள் எப்போ இந்தியாவுக்கு வருவதாக திட்டம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மலையாள படம்

மலையாள படம்

தமிழில் கடைசியாக அமலா பால் நடித்த கடாவர் திரைப்படம் வெளியானது. விக்டிம் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக மலையாள படமான Dvija எனும் படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில், ஒரு குடைக்கு கீழ் கேரளா சேலையை அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X