Amala Paul Net Worth - அமலா பால் பிறந்தநாள்.. ஆத்தி இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?.. தலை சுத்துதே
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலா பால் முதலில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அதனையடுத்து ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்று செட்டிலாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
கேரளாவை சேர்ந்த அமலா பால் தமிழில் அறிமுகமான முதல் படமே சர்ச்சையானது. அந்தப் படத்துக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருந்த மைனா திரைப்படம் அவருக்கு பெரிய வெளிச்சத்தையும், திறமையான நடிகை என்ற பெயரையும் கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார் அமலா. அதன்படி விஜய், ஆர்யா, தனுஷ் என பலருடன் ஜோடி போட்டு நடித்தார்.
ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு முதலில் விஜய்யின் வீட்டில் சம்மதம் கிடைக்காவிட்டாலும்; எப்படியோ சம்மதத்தை வாங்கி திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் சுமூகமாகத்தான் தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

விவாகரத்து பெற்ற ஜோடி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அந்தப் பிரிவுக்கு அமலா பால் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் விவாகரத்து பற்றி வாய் திறக்கவில்லை.முதல் திருமண முறிவுக்கு பிறகு இரண்டு பேருமே இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
அமலா பாலுக்கு மகன்: ஜகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்திருக்கிறார். ஜகத் தேசாய் அடிப்படையில் ஒரு பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்கும் இலை என்ற மகன் இருக்கிறார். தற்போது சுமூகமாகவும், காதலோடும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். தனது கணவர், குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அமலா பால் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும் பகிர்வார்.
அமலா பால் பிறந்தநாள்: இந்நிலையில் அமலா பால் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில்; அமலாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கிய அவர் இதுவரை 40 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறாராம். கேரளாவில் சொகுசு பங்களாவையும் வைத்திருக்கும் அவரிடம் விலையுயர்ந்த கார்களும் உள்ளனவாம். ஜகத் தேசாயும் தனது பங்குக்கு சொத்துக்களை சேர்த்திருக்கிறாராம். இரண்டு பேரின் சொத்துக்களையும் சேர்த்தால் மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











