»   »  10 படங்களில் ஹீரோயின்... 100 கோடி வசூல்... கேரியரின் உச்சத்தில் அமலா பால்!

10 படங்களில் ஹீரோயின்... 100 கோடி வசூல்... கேரியரின் உச்சத்தில் அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைத்துறையில் காலூன்றி ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்ற கதாநாயகிகள் வெகு சிலரே. அவர்களில் ஒருவராக அமலா பாலும் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சுதீப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட 'ஹெப்புலி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அனைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்தத் திரைப்படம் 100 கோடிகளை வசூலித்து 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூலித்த படங்களின் நடித்த நடிகைகளின் கிளப்பில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார்.

Amala Paul in cloud nine

இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாகத் தயாரிக்கப்படும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் 'திருட்டு பயலே' படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்கிறார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் இயக்கும் 'மின்மினி' படத்தில் விஷ்ணு விஷாலுக்குக் கதாநாயகியாகவும், முருகன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாகவும், செஞ்சுரியன் பிலிம்ஸ் ஜோன்ஸ் மற்றும் ஷாலோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

Amala Paul in cloud nine

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் மளையாள பதிப்பில், ரேவதி இயக்கத்தில் கதாநாயகி நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'அச்சாயன்ஸ்' மளையாளப் படத்திலும், அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரில்லர் படத்திலும் நடிக்கிறார்.

கிட்டத்தட்ட பத்துப் படங்கள். அவரைப் பொருத்தவரை, கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் இப்போதுதான்.

English summary
Actress Amala Paul has become most wanted actress of South Indian Cinema as she joined 100 Crores Actress Club with the stupendous success of her Kannada movie "Hebuli" starring Kiccha Sudeep and Directed by Krishna.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil