»   »  குட்டி உடை: அசிங்கமா கமெண்ட் போட்ட நபருக்கு அமலா பால் பதிலடி

குட்டி உடை: அசிங்கமா கமெண்ட் போட்ட நபருக்கு அமலா பால் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை பற்றி அநாகரீகமாக ட்விட்டரில் கமெண்ட் போட்ட ரசிகருக்கு நடிகை அமலா பால் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை அமலா பால் தனது காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக உள்ளனர்.

அமலா பால்

அமலா பால் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளில் விளையாடும் சென்னை ராக்கர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடை

சிபிஎல்இந்தியா எனப்படும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் சென்னை அணி அறிமுக விழாவுக்கு அமலா பால் குட்டியான அழகான கவுன் அணிந்து வந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

கமெண்ட்

விவாகரத்தான பெண்கள் எப்பொழுதும் ஹாட் மற்றும் குறும்பு என அம்பிஷியஸ் பாய் என்பவர் ட்விட்டரில் அமலா பாலை பற்றி கமெண்ட் போட்டுள்ளார்.

பதிலடி

அம்பிஷியஸ் பாயின் கமெண்ட்டை பார்த்த அமலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஏ பையா.. உங்களின் நோக்கம் தவறான பாதையில் உள்ளது. தயவு செய்து பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Amala Paul has asked a man who commented about her short dress to learn to respect woman.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil