கையில் சரக்கு கிளாஸ், போதையில் போஸ் கொடுத்த அமலாபால்...அதுவும் எங்கு தெரியுமா ?
சென்னை : கையில் சரக்கு கிளாசுடன், போதை தலைக்கு ஏறிப் போன நிலையில் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலாபால், மலையாளத்தில் நீலதாமரா படத்தின் மூலம் நடிகையானார். அடுத்தது தமிழில் வீரசேகரன் படத்திலும் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.

இமேஜை கெடுத்த படம்
இருந்தாலும் இரண்டாவதாக சிந்து சமவெளி படத்தில் நடித்து பாப்புலராகி விட்டார். பல இளம் நடிகைகள் நடிக்க தயங்கி, மறுத்த ரோலில் அமலாபால் நடித்தார். இந்த படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், ஒரு மார்க்கமான நடிகை என்ற பெயரையும் அமலாபாலுக்கு பெற்று தந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து அமலாபால் நடித்த மைனா படம் அவர் மீதான தவறான இமேஜை மாற்றியது.

ரிஸ்க் எடுத்த அமலாபால்
இதனால் விக்ரம், விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகியை மையமாகக் கொண்ட பல படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டினார். ஆனால் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்ததால் இமேஜை கெடுத்துக் கொண்டதுடன், பட வாய்ப்புக்களையும் இழந்தார் அமலாபால்.

சினிமாவில் ரீஎன்ட்ரி
கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் குட்டி ஸ்டோரி, அதோ அந்த பறவை போல ஆகிய தமிழ் படங்களிலும், வெப் சீரிஸ், மலையாள படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். நாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

முறிந்த திருமண வாழ்க்கை
2011 ம் ஆண்டு தெய்வ திருமகள் படத்தில் நடித்த போது டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் அமலா பாலுக்கு காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த தகவலை மறுத்து வந்த இவர்கள், 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட இந்த ஜோடி, 2016 ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதீத கவர்ச்சி
அதற்கு பிறகு கவர்ச்சியான ஃபோட்டோக்கள், டாப்லெஸ் ஃபோட்டோக்கள் என எல்லை மீறிய கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார் அமலாபால். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் விவகாரமான ஃபோட்டோ வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.
Recommended Video

போதையில் போஸ்
தற்போது அமலாபால் துபாயில் இருந்து வருகிறார். கடந்த வாரம் தான் துபாய் அரசு இவருக்கு கோல்டன் விசா வழங்கியது. இந்நிலையில் துபாயில் பார் ஒன்றில் கையில் சரக்கு கிளாசுடன், செம போதையில் இருப்பது போன்ற ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து இவரின் ரசிகர்களும், நெட்டிசன்களும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











