»   »  அமலா பால் தெளிவா இல்லை பிழைக்கத் தெரியாத பொண்ணா?

அமலா பால் தெளிவா இல்லை பிழைக்கத் தெரியாத பொண்ணா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யிடம் இருந்து ஜீவனாம்சமோ, சொத்துக்களோ எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் முறைப்படி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி மரியா கில்டா தெரிவித்துள்ளார்.

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம்

அமலா பாலும், விஜய்யும் ஏற்கனவே கடந்த ஓராண்டு காலமாக பிரிந்து தான் வாழ்கிறார்கள். இந்நிலையில் அமலா விஜய்யிடம் இருந்து ஜீவனாம்சமோ, சொத்தோ எதுவும் எதிர்பார்க்கவில்லை.

விட்டால் போதும்

விட்டால் போதும்

விஜய்யிடம் இருந்து பிரச்சனை இல்லாமல் விவாகரத்து பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளாராம் அமலா. அதனால் தான் ஜீவனாம்சம் கூட கேட்கவில்லை என்று பேசப்படுகிறது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

ஹாலிவுட்டில் எல்லாம் மனைவி விவாகரத்து கேட்டால் ஹீரோக்கள் அஞ்சுவார்கள். காரணம் சொத்தில் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டு தான் மனைவிகள் செல்வார்கள். அதனாலேயே விவாகரத்து என்றால் ஹீரோக்கள் பேய் அறைந்தது போன்று ஆகிவிடுவார்கள்.

வித்தியாசம்

வித்தியாசம்

ஹாலிவுட்டில் விவாகரத்து இப்படி காஸ்ட்லியாக உள்ள நிலையில் அமலா பால் ஜீவனாம்சம் உள்ளிட்ட எதுவுமே வேண்டாம் என்று கூறியிருப்பது பலரை வியக்க வைத்துள்ளது.

English summary
People are wondering as to why actress Amala Paul is not expecting alimony from director AL Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil