Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 12 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- News
உலகின் மிக பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லேகா ரத்னகுமாரின் அடுத்த ரிலீஸ் 'லேகாஃபுட்ஸ்'!

இவர் மட்டுமல்ல, ஜோதிகா, சினேகா, பாக்யராஜ், பூர்ணிமா என அத்தனை பிரபலங்களையும் தனது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்து புதுப்புது ஐடியாக்களில் விளம்பரப் படங்களை ரிலீஸ் செய்த லேகா ரத்னகுமாரின் அடுத்த ரிலீஸ் லேகாஃபுட்ஸ். இது விளம்பரம் மட்டுமல்ல, ஒரு இணையதளமும் கூட.
உலகின் அத்தனை வகை உணவுகள், அதன் செய்முறை, கலர்புல் படங்கள் என பக்காவான தகவல்கள் அடங்கிய இணைய தளம் இது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் சுவையான ரெஸிபிக்கள் இதில் உண்டு.
லேகாஃபுட்ஸ்.காம் எனும் இந்த இணையதளத்துக்காக ஒரு தனி விளம்பரப் படமும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விளம்பர மாடலாக நடித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி பட ஹீரோயின்.
என்ன திடீர்னு சமையல், இணையதளம்னு இறங்கிட்டீங்க? என்று ஆரம்பித்தோம்.
இது திடீர் யோசனை அல்ல. பல ஆண்டுகளாக மனதில் இருந்த திட்டம். என்னுடைய ஆரம்ப நாட்களில் சமையல் பொருள்கள், பருப்புப் பொடி போன்றவற்றை பேக் செய்து விற்பனை செய்தோம். அப்போதே ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினோம்.
ஆனால் விளம்பரப் படங்கள், இசை, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என பரபரப்பாகிவிட்டோம்.
ஆனால் மனசுக்குள் இந்த சமையல் - ஹோட்டல் இரண்டும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருந்தது. நான் இயக்கும் விளம்பரப் படங்களும் கூட சமையலுடன் தொடர்புடையவைதான். சரி, இப்போதைக்கு, நல்ல உணவுகள் எவை என்பதை மக்களுக்கு எழுத்தில் காட்டுவோம். இதை பெரிய அளவில் செய்யலாம் என்றுதான் லேகாஃபுட்ஸ் எனும் இந்த தளத்தை தொடங்கியுள்ளேன்.
இதில் வரும் உணவுக் குறிப்புகள் அத்தனையும் ஒரிஜினலானவை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ரெஸிபிகளை எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள்.
விரைவில், இந்த தளத்துக்காகவே சமையல் செய்முறை விளக்கங்களை வீடியோவாக எடுத்து நேரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.
இந்த தளத்துக்காக எடுக்கப்பட்ட 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அசத்தலான விளம்பரப் படத்தில்தான் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இந்த விளம்பரம் யு ட்யூப்பிலும் ரிலீசாகிறது.
விரைவில் உலகளாவிய சமையல் போட்டியொன்றை நடத்தவிருக்கும் லேகா, ஐபோன் மற்றும் ஐபேட்களை அதற்குப் பரிசாக அறிவிக்கப் போகிறாராம்.