»   »  அம்மா கணக்கு... ‘சாந்தி’க்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொன்ன அமலாபால்

அம்மா கணக்கு... ‘சாந்தி’க்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொன்ன அமலாபால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா கணக்கு படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார் அமலாபால்.

தமிழில் மைனா படம் மூலம் திறமையான நடிகையான அடையாளம் காணப்பட்டவர் அமலா பால். இயக்குநர் விஜயைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவை விட்டு சற்று விலகியிருந்த அமலாபால், பசங்க 2 படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆனார்.


அதனைத் தொடர்ந்து அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அம்மா கணக்கு என்ற படத்தில் நடித்தார்.


ரீமேக்...

ரீமேக்...

இந்தியில் தான் இயக்கிய 'நில் பேட்டே சனாட்டா' என்ற அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தைத் தான் தமிழில் அம்மா கணக்கு ஆக்கினார் அஸ்வினி.


தனுஷ் தயாரிப்பு...

தனுஷ் தயாரிப்பு...

தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தில் அமலாபால் கணவரை இழந்து, மகளும் வாழும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசானது.


சாந்தி...

சாந்தி...

இப்படத்தில் அதிக மேக்கப், கவர்ச்சியான உடை என எதுவும் இல்லாமல், எளிமையான தோற்றத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலா பால். 24 வயதேயான அமலா பால், இப்படத்தில் 15 வயது பெண்ணுக்குத் தாயாக நடித்துள்ளார்.


இயல்பான நடிப்பு...

இயல்பான நடிப்பு...

அமலாபாலின் இயல்பான நடிப்பு அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. எனவே, தன்னைப் பாராட்டிய நல்லுள்ளங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


நன்றி... நன்றி...

நன்றி... நன்றி...

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அம்மா கணக்குப் படத்திற்கு எல்லாப் பக்கங்களில் இருந்து நல்ல பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த தனுஷ், அஸ்வினி ஐயர் அவர்களுக்கும், என்னுடன் இணைந்து நடித்த ரேவதி மேம், சமுத்திரக்கனி சார், யுவஸ்ரீ என அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஊக்கம்...

ஊக்கம்...

இந்த சாந்தி கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மூலம் இதேபோன்ற நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஊக்கம் எனக்கு ஏற்பட்டுள்ளது.


ஆதரவுக்கு நன்றி...

ஆதரவுக்கு நன்றி...

இந்த வெற்றியை எனக்குப் பெற்றுத்தந்த ரசிகர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. வருங்காலத்தில் உங்களது ஆதரவு எனக்குத் தொடரும் என எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


English summary
June 24th marked the release of Amma Kanukku starring Amala Paul and Revathi in the lead, which emphasized on womanhood and significance of education. Amala Paul registered her gratitude through her social media space. Following is the thanks note as posted by the Myna lady.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil