»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சரண் இயக்கி மாதவன் நடித்து வரும் படம் ஜேஜே. படத்தின் பெயரில் ஏதோ இருக்கிறதே என்று புருவத்தைஉயர்த்துபவர்களுக்காகவே இந்த நியூஸ்.

ஜேஜே என்றால் வேறு ஒன்றும் இல்லையாம். மாதவனுக்குப் படத்தில் ஜெகன் என்று பெயர், அவரது ஜோடியாக வரும்அமோகாவுக்கு (அம்மணி, சும்மா அமோகமாக இருக்கிறாருங்கோவ்!) ஜனா என்று பெயராம்.

இருவரது பெயர்களின் முதல் எழுத்தையும் சேர்த்து ஜேஜே என்றாக்கி விட்டார்களாம்.

சேசே, இம்புட்டுத்தானா என்பவர்களுக்கு இன்னொரு செய்தி.

இன்னும் ஒரு படம் கூட வராத நிலையில் அமோகாவுக்கு ஏராளமான வாய்ப்புக்கள் குவிகின்றன.தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பல வயது ஹீரோக்கள் என அனைவரும் அமோகாவைக் குறி வைக்கஆரம்பித்துள்ளனர்.

அஜீத் - சரணின் "அட்டகாசம்"

சரண் பற்றி இன்னொரு நியூஸ்.

காதல் மன்னன், அமர்க்களம் என அட்டகாசம் செய்த அஜீத்-சரண் கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இடையில் நடந்த சண்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருவரும் ஒன்று சேரும் படத்தின் பெயர்அட்டகாசம்.

அஜீத் படம் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்விதமாக, கலக்கல் படமாக அட்டகாசத்தைக் கொடுக்க உள்ளார்களாம்.

அஜீத்துக்கு இதில் ஜோடி பூஜா. படத்தில் அஜீத் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம். படத்தைத்தயாரிப்பது தீனா படத்தை எடுத்த கார்த்திகேயன் தயாரிக்கிறார். பாடல்களை கவியரசு வைமுரத்து எழுதஇசையமைக்கப் போவது பரத்வாஜ்.

படத்தை "சுகுர்ராக" தயாரித்து வெளியிட திட்டமாம். ஆஞ்சநேயா முடிந்த பிறகு இந்தப் படத் தயாரிப்புதொடங்குகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil