»   »  நல்லா இருந்த அமோஹாவை இப்படி ஆக்கிட்டீங்களேப்பா!

நல்லா இருந்த அமோஹாவை இப்படி ஆக்கிட்டீங்களேப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அமோஹா... இவரைத் தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் அலை பரப்பியவர். இப்போது இவரை எங்குமே பார்க்க முடியவில்லை.

ஜேஜே என்ற படம் தான் இவருக்கு தமிழில் ஜேஜே போட உதவியது. ஆனால் காலப் போக்கில், கவர்ச்சிகளின் தாக்கத்தால், தமிழில் வாய்ப்பிழந்து வெளியேறியவர் இந்தியில் நிஷா கோத்தாரி என்ற பெயரில் கவர்ச்சிகரமாக அமர்க்களம் செய்ய ஆரம்பித்தார். குத்துப் பாட்டுகளுக்கும் கோலாகலமாக ஆட ஆரம்பித்தார்.

இதைப் பார்த்து வியந்து போய் தமிழிலும் இவரை ஆடக் கூப்பிட்டார்கள். இவரும் ஆடி வந்தார். இப்போது அதையும் காணோம்.

புல்லட் ராணி

புல்லட் ராணி

இந்த நிலையில் தெலுங்கில் இவர் அதிரிபுதிரி ராணியாக ஒரு படத்தில் அமர்க்களப்படுத்தியுள்ளார். படத்தின் பெயர் புல்லட் ராணி.

போலீஸ்டா

போலீஸ்டா

படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் நிஷா. கையில் லத்தி, வாயில் கத்தி (அனல் பறக்கும் டயலாக்) என்று கொத்தி எடுக்கிறாராம் "பேட் பாய்ஸ்"களை.

சட்டை பட்டனைக் கழட்டிட்டா

சட்டை பட்டனைக் கழட்டிட்டா

ஆண் போலீஸார்தான் மேல் சட்டை பட்டனைக் கழற்றி விட்டு அதகளம் செய்ய வேண்டுமா என்ன.. இதில் நிஷாவும் அதேபோல செய்து மிரட்டியுள்ளார்.

வழக்கம் போல அரசியலும், அடிதடியும்

வழக்கம் போல அரசியலும், அடிதடியும்

நேர்மையான போலீஸ் என்றால் ஒன்று அரசியல்வாதி எதிரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு தாதாவாக இருக்க வேண்டும். இதில் அரசியல்வாதிதான் நிஷாவுக்கு முதல் எதிரி.

கவர்ச்சியும்,காக்கிச் சட்டையும்

கவர்ச்சியும்,காக்கிச் சட்டையும்

படத்தில் அதகளம் செய்துள்ளாராம் நிஷா. காக்கிச் சட்டையில் வீர வசனமும், அடிதடியும், அட்டகாசமான ஆக்ஷனும் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பின்னிப் பெடலெடுத்துகிறாராம்.

ஜேஜேன்னு நடித்த அமோஹாவை இப்படி மாத்திட்டீங்களேப்பா கடைசியில்!

English summary
Actres Amoha has turned violent for Bullet Rani Telugu movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil